close
Choose your channels

'குக் வித் கோமாளி' மணிமேகலைக்கு நேர்ந்த விபத்து.. அதிர்ச்சி புகைப்படம்..!

Sunday, October 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மணிமேகலை. இவர் திடீரென காலில் கட்டு போட்டு படுக்கையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

குக் வித் கோமாளி முதல் இரண்டு சீசன்களில் கோமாளியாக வந்து கலக்கிய மணிமேகலை, அதன்பின்னர் மூன்றாவது சீசனில் சில எபிசோடுகளுக்கு மட்டும் கோமாளியாக இருந்தார். பின்னர் திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார். அதன் பிறகு மீண்டும் அதே நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக பணிபுரிந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மணிமேகலை திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலில் கட்டு போட்டு படுக்கையில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். நடந்து கொண்டிருக்கும் போது திடீரென தவறி விழுந்து விட்டேன் என்று அவர் கேப்ஷனாக பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த பதிவை பார்த்து பலர் ’உடம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்’ ’சீக்கிரம் குணமாக வாழ்த்துக்கள்’ என்று கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment