close
Choose your channels

'குக் வித் கோமாளி' புகழுக்கு இது இரண்டாம் திருமணமா? முதல் திருமண புகைப்படம் வைரல்!

Saturday, September 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் தனது நீண்ட நாள் காதலி பென்சியாவை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் புகழ் மற்றும் பென்சியா ஆகிய இருவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஏற்கனவே சுயமரியாதை முறையில் திருமணம் நடந்து விட்டதாகவும் தற்போது உறவினர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக மீண்டும் திருமணம் செய்து கொண்டதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் என்பவரது முன்னிலையில் புகழ்-பென்சியா திருமணம் சுயமரியாதை முறைப்படி பதிவு திருமணம் நடைபெற்று இருப்பதாகவும் தற்போது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக கோவிலில் தாலி கட்டி முறையாக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சுயமரியாதை முறைப்படி புகழ்-பென்சியா திருமணம் நடந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.