close
Choose your channels

என் முதல் ஹீரோ அப்பா தான்: 'குக் வித் கோமாளி' புகழின் தந்தையர் தின ஸ்பெஷல்!

Sunday, June 20, 2021 • தமிழ் Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி சீசன் 2 மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது என்பதும், இந்த நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் ஆன பின்னரும் இன்னும் பழைய எபிசோடுகளை ஹாட்ஸ்டாரில் திரும்ப திரும்ப ரசிகர்கள் பார்த்து வருவதிலிருந்து இந்த நிகழ்ச்சி எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்பது தெரிய வரும்.

இந்த நிலையில் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘குக்’களும், கோமாளிகளும் தற்போது மிகப்பெரிய அளவில் பிரபலமானதோடு அதில் சிலர் திரையுலகில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் தற்போது 7 படங்களில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் இன்று தந்தையர் தினத்தை அடுத்து புகழ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அப்பாவுக்கு அன்புடன் சாப்பாடு ஊட்டும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அருகில் அவரது தாயார் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தின் கேப்ஷனாக, ‘தந்தையர் தின வாழ்த்துக்கள்’ என்றும், என்னுடைய முதல் ஹீரோ தந்தை தான் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் பதிவு செய்யப்பட்டு ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
 

Get Breaking News Alerts From IndiaGlitz