'குக் வித் கோமாளி' ரக்சன் சம்பளம் இவ்வளவா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ’குக் வித் கோமாளி. சனி ஞாயிறு எப்போது வரும் என்று பார்வையாளர்கள் காத்திருந்து அந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். 3 சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் மூன்று சீசன்களையும் ரக்சன் தான் தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரக்சன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மட்டுமன்றி அவ்வப்போது செஃப்களுடன் இணைந்து காமெடி செய்வதிலும் குக்குகளுடன் சேர்ந்து சமைப்பதும் கோமாளிகள் உடன் சேர்ந்து ஆட்டம் போடுவதும் பார்வையாளர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

இந்த நிலையில் ரக்சனுக்கு ஒரு எபிசோடுக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கோமாளிகளுக்கு ஒரு எபிசோடுக்கு 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் என்று அவ்வப்போது பாலா, மணிமேகலை கூறி வந்த நிலையில் தொகுப்பாளருக்கு தொகுப்பாளர் ரக்சனுக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளம் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சமீபத்தில் சிறந்த தொகுப்பாளர் விருதையும் ரக்சன் பெற்றார் என்பதும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே.
 

More News

இந்த இருவரிடம் இருப்பதை விட தெருநாய்களிடம் பாதுகாப்பாய் இருப்பேன்: சின்மயி

இந்த இருவரிடம் ஒரு அறையில் தனியாக இருப்பதை விட தெரு நாய்களுடன் ஒரு அறையில் தனியாக இருப்பது பாதுகாப்பானது என பாடகி சின்மயி தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வெற்றிக்கு பின் குருவுக்கு நன்றி சொன்ன சிஷ்யன்!

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'டான்' திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தனது குரு இயக்குனர் அட்லிக்கு

பண்டிட் ஷிவகுமார் ஷர்மா மறைவு: நட்பின் ஆழத்தை விவரிக்கும் ஒரே ஒரு புகைப்படம்!

சமீபத்தில் இசை மேதையான பண்டிட் ஷிவகுமார் சர்மா காலமான நிலையில் அவருடைய நெருங்கிய நண்பரும் இசைக் கலைஞருமான ஜாகிர் உசேன் அவரது சமாதி முன் நின்று இருந்த புகைப்படம்

நேற்று ரிலீஸ் ஆக வேண்டிய 'ஐங்கரன்' படத்திற்கு என்ன ஆச்சு? நல்ல தகவல் கூறிய ஜிவி பிரகாஷ்!

 ஜிவி பிரகாஷ் நடித்த 'ஐங்கரன்' திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ரிலீஸ் ஆகவேண்டிய நிலையில் அவ்வப்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டு வந்தது.

சமந்தாவின் வேற லெவல் வொர்க்-அவுட் வீடியோ: காஷ்மீர் போனாலும் விடுவதில்லை!

 நடிகை சமந்தா தற்போது காஷ்மீரில் விஜய்தேவரகொண்டா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் அங்கும் அவர் அதிகாலை நேரத்தில் ஜிம் சென்று ஒர்க் அவுட் செய்யும் வீடியோ