close
Choose your channels

குக் வித் கோமாளியில் இந்த வார எலிமினேஷன் இவரா? யாரும் எதிர்பாராத முடிவு..

Sunday, April 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் கடந்த மூன்று சீசன்களாக இந்த நிகழ்ச்சி பெரும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் தெரிந்ததே.
 

ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஸ்ருஷ்டி டாங்கே, ஷெரின், ராஜ் அய்யப்பா, ஷிவாங்கி, விஜே விஷால், காளையன், விசித்ரா, அண்ட்ரின் நெளரிகட், கிஷோர், மைம் கோபி, ஆகிய 10 குக்குகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த நிலையில் ஏற்கனவே கிஷோர், காளையன், ராஜ் அய்யப்பா மற்றும் விஜே விஷால் ஆகிய நான்கு குக்குகள் வெளியேறிவிட்டனர்.

இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் வாரம் என்பது மட்டுமின்றி இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் எலிமினேஷன் ரவுண்டில் இருந்தனர். அவர்களில் ஷிவாங்கி, ஸ்ருஷ்டி மற்றும் ஷெரின் ஆகிய மூவரில் ஒருவர் எலிமினேஷன் செய்யப்படுவார்கள் என்ற நிலை ஏற்பட்டது

இதனை அடுத்து செப் வெங்கடேஷ் பட் மற்றும் செப் தாமு ஆகிய இருவரும் ஆலோசனை செய்து இந்த மூவரில் ஷெரின் எலிமினேஷன் செய்யப்படுவதாக அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஷெரின் ஒரு குக்காக மட்டுமின்றி கோமாளியை போலவே நல்ல காமெடி செய்து கொண்டிருந்த நிலையில் அவருடைய எலிமினேஷன் துரதிர்ஷ்டவசமானது என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.