close
Choose your channels

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா?

Sunday, May 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் ஆரம்பித்தது என்பதும் மூன்று வாரங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது நான்காவது வாரம் விறுவிறுப்பாக ஒளிபரப்பானது என்பதும் தெரிந்தது.

இந்த நிகழ்ச்சியில் 10 குக்குகள் மற்றும் 14 கோமாளிகள் கலந்து கொண்ட நிலையில் முதல் மூன்று வாரத்தில் எந்த விதமான எலிமினேஷனும் இல்லை என்பது இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் வாரம் என்ற நிலையில் ஜோயா தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

மேலும் நேற்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எல்லோருடைய அன்புக்கும் நன்றி, நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் தந்தவர்களுக்கும் எனது நன்றி, எனக்கு ஆதரவாக பேசியவர்களுக்கும் நன்றி, நான் உங்கள் அனைவரையுமே நேசிக்கிறேன்.

கடந்த 20 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்தோம் ஒரு ரியாலிட்டி ஷோ என்னை மிகப் பெரிய அளவில் பிரபலம் ஆக்கி உள்ளது. இப்போதுதான் நான் சமூக ஊடகங்களின் சக்தியை உணர்கிறேன். நான் நடித்த எல்லா கதாபாத்திரத்தையும் விட ஒரு ரியாலிட்டி ஷோ பயணம் என்னை மிகப்பெரிய அளவில் பிரபலமாகியுள்ளது. இந்த ஷோ எனக்கு மிகவும் முக்கியமானது. உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

ஜோயா பதிவில் இருந்து அவர் தான் எலிமினேஷன் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் இந்த வாரம் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தான் எலிமினேஷன் செய்யப்பட்டார் என்பதும், ஜோயா எலிமினேஷன் ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment