close
Choose your channels

'குக் வித் கோமாளி' சீசன் 5: கிராண்ட் ஓப்பனிங் தேதி அறிவிப்பு.. அட்டகாசமான ப்ரோமா வீடியோ..!

Thursday, April 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் நடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகும் தேதி குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியை வெங்கடேஷ் பட் மற்றும் செப் தாமு ஆகியோர் வழங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன்களும் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது.

ஆனால் ’குக் வித் கோமாளி’ சீசன் 5 நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள போவதில்லை என வெங்கடேஷ் பட் அறிவித்த நிலையில் அவரை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திபன் மற்றும் தயாரிப்பாளரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டனர்.

இதனை அடுத்து புத்தம் புது டீம் உடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் செப் தாமுவுடன் மாதம்பட்டி ரங்கராஜ் இந்த நிகழ்ச்சியை நடுவராக இருந்து வழங்குவார் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் ’குக் வித் கோமாளி’ சீசன் 5, ஏப்ரல் 27 முதல் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் இரவு 9.30 என்று ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டு புதிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment