close
Choose your channels

புள்ளி வச்சு கோலம் போட்ட 'குக் வித் கோமாளி' கனி: வைரல் வீடியோ

Sunday, July 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது என்பதும், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குக்’கள் மற்றும் கோமாளிகள் வேற லெவலில் பிரபலமானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் சிலருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து, தற்போது பிசியாக உள்ளனர் என்பதும் அவர்களில் அஸ்வின், ஷிவாங்கி, புகழ், தர்ஷா, பவித்ரா ஆகியவர்கள் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் கனி, மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அவர் பொன்னியின் செல்வன் நாவலை தனது சமூக வலைத்தளத்தில் சுவராசியமாக கூறிவரும் நிலையில் தற்போது டைட்டில் பட்டம் வென்றதை அடுத்து அவரது சமூக வலைத்தளத்தில் ஃபாலோயர்களின் எண்ணிக்கை குவிந்து வருகிறது.

இந்த நிலையில் கனி, சற்று முன்னர் தனது வீட்டின் முன் புள்ளி வைத்து கோலம் போடும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பதும் இந்த வீடியோ பதிவு செய்த ஒரு சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment