close
Choose your channels

திடீரென இணைந்த 'கூலி' மற்றும் 'மாவீரன்' டீம்.. என்ன விசேஷம்?

Sunday, May 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ டீம் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள ‘கூலி’ படத்தின் டீம் திடீரென இணைந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான முதல் படமான ’மாநகரம்’ மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘கூலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குனர் மற்றும் உதவி திரைக்கதை எழுத்தாளர் சந்துரு அன்பழகன் என்பவரின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது

இந்த பிறந்தநாள் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டதோடு ’மாநகரம்’ படத்தின் டீம் மற்றும் ’கூலி’ படத்தின் இயக்குனர்கள் டீம் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை சந்துரு அன்பழகனுக்கு தெரிவித்தனர். இதனை அடுத்து சந்துரு அன்பழகன் தனது சமூக வலைத்தளத்தில் ‘மாவீரன்’ மற்றும் ’கூலி’ படத்தின் குழுவினர் நேரில் வந்து எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி என்றும் குறிப்பாக சிவகார்த்திகேயன் அவர்கள் நேரில் வந்தது தனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது என்றும் அவருடைய வாழ்த்தும் எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது என்றும் தெரிவித்துள்ளார்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ’மாவீரன்’ படத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ’கூலி’ படத்தின் இயக்குனர்கள் டீம் ஆகிய அனைவரும் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment