close
Choose your channels

உலகம் முழுவதும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் வயதானவர்கள்!!!!

Thursday, April 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் வயதானவர்கள்!!!!

 

கொரோனா பரவலில் அதிகம் பாதிக்கப்படுவது வயதானவர்களாகத் தான் இருக்கின்றனர். கொரோனா அனைவருக்கும் ஒரே மாதிரியான பாதிப்பினை கொடுக்காமல் வேறுபட்ட தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. உலகச்சுகாதார நிறுவனம் வயதானவர்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு தொடர்ந்து அறிவுறுத்திவரும் நிலையில் வயதானவர்கள் கொரோனா கட்டத்தை எப்படி கடக்கிறார்கள் என்பதும் அவசியமான ஒன்றாக தற்போது மாறியிருக்கிறது. கொரோனாவால் வயதானவர்கள் ஏன் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது குறித்து லண்டன் இம்பீரியல் மருத்துவக் கல்லூரி ஆய்வு மேற்கொண்டுவருகிறது.

கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் எந்த வயதினருக்கு தீவிரச் சிகிச்சை தேவைப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஆய்வில் 50 வயதுடைய கொரோனா நோயாளிகளில் 5 விழுக்காட்டினருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரியவந்திருக்கிறது. ஆனால் 70-79 வயது கொரோனா நோயளிகளில் 24 விழுக்காட்டினருக்கு தீவிரச் சிகிச்சை தேவைப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவே 40 வயதுக்கும் குறைவாகவுள்ள கொரோனா நோயாளிகளில் 5 விழுக்காட்டினருக்கு மட்டுமே சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது என்றும் பெரும்பாலானோருக்குச் சிகிச்சையே தேவைப்படுவதில்லை என்றும் அந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

உலகம் முழுக்க கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் அதிகம்பேர் வயதானவர்களாகவே இருக்கின்றனர். 60 வயதில் இருக்கும் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களில் 27 விழுக்காடு தீவிரச்சிகிச்சை தேவைப்படுகிறது. 70 வயதில் இருக்கும் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களில் 43 விழுக்காடு தீவிரச்சிகிச்சை தேவைப்படுகிறது. மேலும், 80 வயதில் இருக்கும் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களில் 71 விழுக்காடு தீவிரச்சிகிச்சை தேவைப்படுகிறது. வயதுக்கூட கூட அவர்களில் அளிக்கப்பட வேண்டிய சிகிச்சையும் அதிகரித்து காணப்படுகிறது. இங்கிலாந்து மற்றம் அயர்லாந்தில் கொரோனா நோயால் அதிகளவு பாதிக்கப்பட்டவர்களின் சராசரி வயது 63 ஆக இருக்கிறது என்றும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டியிருக்கிறது.

அமெரிக்காவின் பாதிப்பு எண்ணிக்கையிலும் வயதான நபர்கள் கணிசமாக உள்ளனர். அந்நாட்டில் உள்ள மொத்த கொரோனா நோயாளிகளில் 53 விழுக்காட்டினர் 55 வயதிற்கும் அதிகமானவர்களாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தாலியிலும் இதே நிலைமைதான். அந்நாட்டில் கொரோனா இறப்பு விகிதத்தில் 0.4 விழுக்காடு மக்கள் 40 வயதிற்கும் குறைவாக இருந்ததாகவும், 19.7 விழுக்காடு மக்கள் 80 வயதைத் தாண்டியவர்களாக இருந்ததாகவும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

இந்த ஆய்வறிக்கையைப் பார்க்கும்போது உலகம் முழுவதும் 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இவர்களைத் தவிர சில நேரங்களில் இளம் தம்பதியினர், இளைஞருக்கும் தீவிரச் சிகிச்சை தேவைப்படுவதாகவும் அவர்களில் பலர் உயிரிழப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நோய்த்தொற்று ஏற்படுவதற்கு வயது ஒருகாரணமாக இருப்பதில்லை. நோய்த்தொற்று ஏற்பட்டு அதனை எதிர்க்கொள்வதில் உள்ள சிக்கலில் வயது ஒரு பெரும் காரணியாக இருப்பதாக மருத்துவ உலகம் கருதிவருகிறது.

சீனாவில் கொரோனா நோய்த்தொற்றினால் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அக்குழந்தைகளில் பலருக்கு இறப்பும் நிகழ்ந்திருக்கிறது. பிரிட்டனில் 18 வயதுடைய ஒரு இளைஞன் கொரோனாவால் உயிரிழந்தார். இந்த புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது கொரேனாவால் இளைஞர்கள், குழந்தைகளும் உயிழிப்பது தெரியவருகிறது. அதே நேரத்தில் கேரளாவில் 90 வயதுகளில் உள்ள தம்பதியினருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். அதேபோல சீனாவிலும் 100 வயதுகளில் இருந்த முதியவர் கொரோனாவில் இருந்து விடுபட்ட செய்தியை ஊடகங்களில் பார்க்க முடிந்தது.

ஆக, கொரோனா நோய் பாதித்தாலும், நோய் எதிர்ப்பு மண்டலம் நல்ல நிலையில் இருப்பவர்கள் அதிலிருந்து தப்பித்துக்கொள்கின்றனர். குழந்தைகளுக்கு அத்தகைய வீரியத்தன்மை இருப்பதில்லை. எனவே குழந்தைகள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என உலகச் சுகாதார அமைப்பு அறிவுறுத்திவருகிறது. சில சமயங்களில் இளைஞர்களுக்கு கொரோனா நோய்த்தொற்றினால் ஏற்படும் அறிகுறிகள் எதுவும் வெளிப்படையாகத் தெரிவதில்லை. இந்தத் தன்மையால் அவர்கள் பலருக்கும் கொரோனா வைரஸை பரப்பிவிடும் அபாயமும் இருப்பதாக உலகச்சுகாதார மையம் எச்சரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் சாதாரணமாக 2 முதல் 3 நபர்களுக்கு வைரஸ்களை கடத்திவிடுகிறார்கள். இதே நிலைமை நீடித்தால் 2020 வரை சமூக விலகலைத் தொடரவேண்டிய அபாயம் தொடரும் என ஆய்வுலகம் எச்சரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.