close
Choose your channels

கொரோனா பரிசோதனைகள் - ரேபிட் கிட் : PCR இரண்டுக்கும் என்ன வித்தியாசம்???

Monday, April 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா பரிசோதனைகள் - ரேபிட் கிட் : PCR இரண்டுக்கும் என்ன வித்தியாசம்???

 

ஒருவருக்கு கொரோனா இருக்கிறதா? இல்லையா என்பதை உறுதிச் செய்வதற்கு உலகம் முழுவதும் இரண்டு வகையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அதில் குறைந்தது 20 நிமிடங்களில் முடிவை தருவது ரேபிட் கிட் பரிசோதனை. ஆனால் ரேபிட் கிட் பரிசோதனை முடிவுகளை மட்டுமே வைத்துக்கொண்டு ஒருவருக்கு கொரோனா இருப்பதாக மருத்துவ உலகம் முடிவுசெய்வதில்லை. ரேபிட் கிட் பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு வந்த நபருக்கு முறையான PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதிலும் ஒருவருக்கு பாசிட்டிவ் முடிவு வந்தால் மட்டுமே கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக மருத்துவ உலகம் முடிவுசெய்கிறது.

 

முதலில் கொரோனா அறிகுறி இருப்பவர்களின் தொண்டை சளி, மூக்கின் சளி போன்றவற்றின் மாதிரிகள் ஒரு பஞ்சு சுற்றப்பட்ட குச்சிகளில் சேகரிக்கப்படுகிறது. சில நேரங்களில் Broncho Scope கருவிகளைக் கொண்டு நுரையீரலில் உள்ள சளி மாதிரிகளும் சேகரிக்கப்படுகின்றன. இப்படி சேகரிக்கப்படும் மாதிரிகளில் கொரோனா மரபணு இருக்கிறதா எனப் பரிசோதனை செய்யப்படுகிறது. இப்பரிசோதனைக்கு அதிகபடியான நேரமும், பணமும் தேவைப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் வைரஸ் கிருமிகள் DNA மரபணுக்களைக் கொண்டிருக்காது. வைரஸ்களில் RNA மரபணுக்கள்தான் இருக்கின்றன. இந்த மாதிரிகளில் உள்ள RNA மரபணுக்களைத் தனியாகப் பிரித்தெடுப்பதும் மிகவும் கடினம். எனவே Reverse Transcritption முறையில் RNA வைரஸ்களில் உள்ள மரபணு முதலில் DNA வாக மாற்றப்படுகிறது. மாற்றப்பட்ட DNA கள் பல்லாயிரக்கணக்கான பிரதிகளாக படமெடுக்கப்பட்டு பின்னர் அதில் இருந்து RNA மரபணுக்கள் அளவிடப்படுகின்றன. இதற்கு Reverse – time Polymerase chain reaction என்று பெயர்.

இப்படி கணக்கிடப்படும் கொரோனா மரபுப்பொருள் மனிதனின் செல்லுக்குள் எந்த அளவிற்கு ஊடுவுகிறது எனக் கண்காணிக்கப்படும். இதை Deliver stage எனக் குறிப்பிடுகின்றனர். Polymerase Chain reaction சுருக்கமாக PCR எனவும் சொல்லப்படுகிறது. இந்தப் பரிசோதனையின் மூலம் ஒருவருக்கு நோய்த்தொற்று எந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது எனவும் கண்டறியமுடியும். இப்படி மேற்கொள்ளப்படும் PCR சோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்யவே குறைந்தது 5-6 மணிநேரம் செலவாகும். தற்போது இந்தியாவில் ICMR இன் அறிவுறுத்தலின்படி கொரோனாவின் இறுதி முடிவுக்கு PCR சோதனை அவசியமான ஒன்றாக இருக்கிறது.

ரேபிட் கிட்

கொரோனா அறிகுறியுள்ள அனைவருக்கும் 5 அல்லது 6 மணிநேரம் செலவு செய்து பரிசோதனை மேற்கொள்வது கடினம். எனவே இன்னொரு வழிமுறையான ரேபிட் கிட் பரிசோதனை முறையை நம்பித்தான் இன்று மருத்து உலகமே செயல்பட்டு கொண்டிருக்கிறது. முதலில் ரேபிட் கிட்டை வைத்து மனித செல்லில் கொரோனா மரபணு இருக்கிறதா எனக் கண்டறியப்படுகிறது. கொரோனா அறிகுறியுள்ள நபர்களுக்கு ரேபிட் கிட் பரிசோதனையில் அவர்களது செல்லுக்குள் கொரோனா மரபணு இருக்கிறதா இல்லையா என்பதை குறைந்தது 20 நிமிடங்களில் கண்டுபிடித்துவிட முடியும். இம்முறையில் எளிதாக கொரோனா அறிகுறியுள்ள நபர்களை பிரித்துவிட முடியும்.

 

அடிப்படையில் மனித நோய்எதிர்ப்பு மண்டலம் நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக உடனே ஆண்டிபாயாடிக்கை சுரக்கும். கொரோனா வைரஸ் நோய்த்தொற்றிலும் இந்த செயல்முறை தொடரும். ரேபிட் கிட் பரிசோதனையில், ஒருவரது உடலில் கொரோனா நோய்க்கு எதிராக அவர்களது நோய் எதிர்ப்பு மண்டலங்கள் சுரக்கும் ஆண்டிபயாடிக்கின் அளவு கணக்கிடப்படுகிறது. அதாவது ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்து, அவருக்கு ரேபிட் கிட்டை வைத்து பரிசோதனை மேற்கொள்ளும்போது, அவரது உடலில் சுரந்துள்ள நோய் எதிர்ப்பின் அளவு கணக்கிடப்படும். அப்படி கணக்கிடப்படும் நோய் எதிர்ப்பு சுரப்பின் அளவு அதிகமாக இருக்கிறதாக என்பதும் கண்டறியப்படும். இதற்கு Anti-Bodies என்று பெயர். பெரும்பாலும் கொரோனா வைரஸ் உடலில் பரவி நோயை ஏற்படுத்தும் பட்சத்தில் தான் இந்த முறை பயன்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பரிசோதனை குறைந்தது 20 நிமிடங்களுக்குள் முடிந்துவிடுகிறது. ரேபிட் பரிசோதனையில் கொரோனா வைரஸ்க்கு எதிராக மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலம் செயல்படுவதை வைத்து கொரோனா நோய்த்தொற்று இருக்கிறது என்பதை பாதி அளவு கணித்து விடமுடியும். இந்தப் பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு வரும்பட்சத்தில் அடுத்து PCR பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது. PCR முடிவு பாசிட்டிவ்வாக இந்தால்மட்டுமே ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிச்செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.