கொரோனா தாக்கம் உலகம் முழுவதும் மோசமாகி வருகிறது: எச்சரிக்கை விடுக்கும் WHO!!!

  • IndiaGlitz, [Tuesday,June 09 2020]

 

கொரோனா அறிகுறியே இல்லாதவர்கள் மற்றவர்களுக்கு நோயைப் பரப்பி வருகிறார்கள் என்று உலகச் சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கவலைத் தெரிவித்து உள்ளார். உலகம் முழுவதும் பரவும் கொரோனா எண்ணிக்கை தற்போது பெரும்பாலும் அறிகுறிகளைக் கொண்டிருப்பதில்லை. எனவே அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பே சிலர் மற்றவர்களுக்கு நோயைப் பரப்புகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா பரவல் சற்று கட்டுக்குள் வந்திருக்கிற நிலையில் உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவலின் விகிதம் அதிகரித்துக் கொண்டே வருவதாக டெட்ரோஸ் குறிப்பிட்டு இருக்கிறார்.

கடந்த 10 நாட்களில் உலகம் முழுவதும் பரவிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் இதன் அளவு 1 லட்சத்து 36 ஆயிரமாக அதிகரித்து இருக்கிறது. இந்த எண்ணிக்கையில் 75 விழுக்காடு அமெரிக்காவினுடையது என்பதும் குறிப்பிடத் தக்கது. கிழக்கு ஆசியா, ஐரோப்பா போன்ற நாடுகளில் அதிகரித்து வந்த கொரோனா எண்ணிக்கை தற்போது சற்று கட்டுக்குள் வந்திருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் தொடர்ந்து நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது என டெட்ரோஸ் கவலைத் தெரிவித்து உள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் சில நாடுகள் முழுவதும் கொரோனாவின் பிடியில் இருந்து வெளிவந்து விட்டதாகவும் அறிக்கை வெளியிட்டு இருக்கின்றன. கடந்த 6 மாதமாக நாம் கொரோனா நோய்த்தொற்றை குறித்து முழுமையாக கணித்து வருகிறோம். நாம் நோயில் இருந்து விடுபட்டு விட்டோம் என்று சுயத் திருப்தி கொள்வதற்கு இது சரியான நேரமல்ல. நாடுகள் தொடர்ந்து பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா நோய் அறிகுறி இல்லாமல் பலர் சந்தேகத்துக்குரிய முறையில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். எனவே உலக நாடுகள் கவனக் குறைவாக இருக்கக் கூடாது எனவும் வலியுறுத்திப் பேசினார்.

ஆப்பிரிக்காவில் தற்போது கொரேனா எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. வெறுமனே 1000 எண்ணிக்கையில் இருந்த நாடுகள் கூட தற்போது அதிக எண்ணிக்கையைப் பெற்றிருக்கின்றன. கடந்த ஞாயிற்றுக் கிழமை பதிவான கொரோனா எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவல் மோசமாகிக் கொண்டே வருகிறது. குறைந்த எண்ணிக்கை மட்டுமே இருக்கிறது என உலக நாடுகள் ஊரடங்கு விதிமுறைகளைத் தளர்த்தி வருகின்றன. ஆனால் இது பாதுகாப்பானது அல்ல எனவும் உலகச் சுகதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் குறிப்பிட்டு உள்ளார்.

More News

ஒவ்வொரு நாளும் உச்சமடையும் கொரோனா பாதிப்பு: என்ன ஆகும் தமிழகம்?

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருவதால் தமிழகம், குறிப்பாக சென்னை என்ன ஆகும் என்பதை நினைத்தாலே பெரும் அச்சமாக உள்ளது

'மாஸ்டர்' படத்தின் மாஸ் வீடியோவை வெளியிட்ட அனிருத்: ரசிகர்கள் குஷி

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

10ஆம் வகுப்பு தேர்வு ரத்து: தூக்கில் தொங்கி மாணவி தற்கொலை

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு ஜூன் 15 முதல் 25 வரை நடத்த தமிழக அரசு திட்டமிட்டு இருந்த நிலையில் எதிர்க்கட்சிகள் மற்றும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டதற்கிணங்க 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து

கொரோனாவுக்கு பலியான நடிகர்-தயாரிப்பாளர்: சோகத்தில் குடும்பத்தினர்

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகமாகி வருகிறது. இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்

இது சாதாரண அடி அல்ல, பிசாசுத்தனமான அசுர அடி: ரஜினிகாந்த் அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அவ்வப்போது தனது சமூகவலைதளத்தில் முக்கிய விஷயங்கள் குறித்து பதிவு செய்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்று குறித்தும்