திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதி… தமிழ அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் திருநங்கைகளுக்கு ரூ.2,000 நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

கொரோனா நேரத்தில் எங்களில் பலர் வேலை இழந்து தவித்து வருவதால் தமிழக அரசு கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் எனத் திருநங்கைகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. அதையடுத்து தற்போது தமிழகத்தில் திருநங்கையர் நல வாரியத்தில் பதிவு செய்த அனைத்து திருநங்கைகளுக்கும் ரூ.2,000 நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த அறிவிப்பின் படி 6,553 திருநங்கைகள் பலன் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் அட்டை வைத்து இருக்கும் திருநங்கைகள் முன்னதாக ரூ.4,000 கொரோனா நிவாரண பெற்றிருப்பர். அவர்கள் மேலும் திருநங்கைகளுக்கு வழங்கப்படும் ரூ.2,000 நிவாரண நிதியைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கொரோனாவால் வேலை இழந்து தவித்து வரும் பொது மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு ரூ.4,000 நிவாரண நிதி வழங்க அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதில் முதல் தவணை நிதி ரூ.2,000 கொடுக்கப்பட்ட நிலையில் வரும் 5 ஆம் தேதி முதல் அடுத்த தவணை நிதி வழங்கப்பட உள்ளது. அதோடு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் 14 பொருட்கள் அடங்கிய சமையல் தொகுப்பும் வழங்கப்பட இருக்கிறது.

More News

போலீஸில் சரணடையும் 'த்ரிஷ்யம்' நாயகன்: கிளைமாக்ஸை மாற்றிய இயக்குனர் யார் தெரியுமா?

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 'த்ரிஷ்யம்' திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் தமிழ் உள்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் மணிகண்டனை, கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அதிமுக - வின்  முன்னாள் அமைச்சரான மணிகண்டன் தன்னை ஏமாற்றிவிட்டதாக,

தடுப்பூசி எப்போது கொடுப்பீர்கள்… மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

முதல் 3 கட்டங்களில் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத மக்களுக்கு எப்போது தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசை,

கோவையில் சந்தேகத்திற்குரிய முறையில் பெண் காவலர் மரணம்....!

கோவையில் பெண் காலவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வனிதா பராக்...திருப்பூருக்கு உதயம்....! நெகிழ்ச்சியில் மக்கள்....!

திருப்பூர் மாவட்டத்தில்,  முதன் முதலாக பெண் ஐபிஎஸ்  அதிகாரி, காவல் ஆணையராக