தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள்!!!

  • IndiaGlitz, [Wednesday,March 18 2020]


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல் நடவடிக்கையாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப் பட்டு இருக்கின்றன. அந்த தனி வார்டுகளில் நீல நிற உடை அணிந்த ஒரு சில மருத்துவர்களைத் தவிர மற்ற யாரும் அனுமதிக்கப் படுவதில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும், ஒவ்வொரு மாவட்டங்களிலும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இருக்கும் பொது மக்கள் தற்போது, தாங்களாகவே கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா? என பரிசோதனை செய்து கொள்ள முன்வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஒவ்வொரு மருத்துவ மனைகள் மற்றும் பொது இடங்களில் சுகாதாரத் துறை பணியாளர்களை கொண்டு கிருமிநாசினிகள் தெளிக்கப் படுகின்றன. இந்த சுகாதாரத்துறை பணியாளர்கள் முகமூடிகள் அணிந்த படி ஏணிப் படிக்கட்டுகள், பேருந்து கைப்பிடி, மருத்துவ மனைகளின் பொது இடங்கள் போன்ற பொது மக்கள் பயன்படுத்தும் முக்கிய இடங்களில் கிருமிநாசினிகளைத் தெளித்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள அரசு மருத்துவ மனைகளின் நுழைவு வாயிலில், தடுப்புகள் அமைக்கப் பட்டு உள்ளே வருபவர்களை பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.

சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையின் முதல் தளத்தில் கொரோனா வார்டு அமைக்கப் பட்டு இருக்கிறது. இந்த Isolation வார்டுக்குள் மற்ற யாரும் உள்ளே அனுமதிக்கப் படுவதில்லை. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நேற்று ஒரு நாள் மட்டும் கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா? என்று 30 பேர் தாங்களாகவே மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சுகாதார பணியாளர்களுக்கு போதுமான வசதிகள் செய்து கொடுக்கப் பட வேண்டும். அவர்கள் பாதுகாப்பாக பணியாற்றும்போது மக்களுக்கு கொரோனா பரவுவதைத் தடுக்க முடியும் என்று பொது மக்கள் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டு இருக்கிறது. மக்கள் கூடும் பெரும்பாலான இடங்கள் மூடப் பட்டு இருக்கிறது. திரையரங்குகள், மால்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை மூடப்படவும் உத்தரவிடப் பட்டு இருக்கிறது. பேருந்துகள், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் கிருமிநாசினி பொருட்களை சுகாதாரத் துறை பணியாளர்கள் தெளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

சென்னையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பலர் வீடுகளில் தனிமைப் படுத்தப் பட்டும் வருகின்றனர். மேலும், 28 பேர் மருத்துவமனைகளில் தொடர் கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
 

More News

இது யாரு பார்த்த வேலைன்னு தெரியலை: 'தளபதி 65' குறித்து பிரபல இயக்குனர்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது

தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு; வீடுகளில் தனிமைப் படுத்தப் பட்ட 2,635 பேர்!!!

மிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 2,635 பேரை அவர்களது வீடுகளில் தனிமைப் படுத்தி வைத்து இருப்பதாகத் தமிழக சுகாதாரத் துறை இயக்குனரகம் தெரிவித்து

இந்தியாவில் முதல் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை பார்த்த மருத்துவருக்கு கொரோனா..!

76 வயதான முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று அவருக்கு சிகிச்சையளிக்க மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2000 ரூபாய் நோட்டுகளின் நிலைமை என்ன??? தொடரும் சந்தேகங்களுக்கு விளக்கம்

கடந்த சில தினங்களாக ATM மெஷின்களில் 2000 ரூபாய் நோட்டுகளை உள்ளீடு செய்ய முடியாமல் பலர் தவிர்த்து வந்தனர்

கொரோனாவை முறியடிக்க புதிய மருந்து கண்டுபிடித்துள்ளோம்..! அர்ஜுன் சம்பத்.

ஆடாதொடா போன்ற பல மூலிகைகளை சேர்த்து நிலவேம்பு கசாயம் ஃபார்முலா 2.0வை உருவாக்கியுள்ளோம். இதை மக்கள் அனைவருக்கும் இந்து மக்கள் கட்சி கொண்டு சேர்க்கும்.