கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு பிரசவம்!!! பிறந்த குழந்தைக்கும் தொற்று இருக்கிறதா எனப் பரிசோதனை!!!

  • IndiaGlitz, [Tuesday,April 07 2020]

 

இலங்கையில் களுத்துரை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்தக் குழந்தைக்கும் கொரோனா தொற்று இருக்கிறதா என்ற சந்தேகத்தை தீர்த்துக்கொள்வதற்காக தற்போது குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளனர்.

களுத்துரை அடுத்த பன்னிலத்தில் இருக்கும் வணிகவாளத்திற்கு சென்றபோது கர்ப்பிணிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து தனிமைப்படுத்தப் பட்ட அவர் பன்னிலத்தில் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். முன்னதாக சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவர் கொரோனா பாதிப்பு இல்லாத குழந்தையைப் பெற்றெடுத்தார். அதேபோல இந்தக் குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் தற்போது மருத்துவர்கள் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் இதுவரை 178 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியிருக்கிறது. மேலும், 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முக்கிய அறிவிப்பு!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், இளம் இசைப்புயல் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்

கொரோனா நிவாரண நிதி; பிரதமருக்கு அறிவுறுத்திய சுப்பிரமணிய சுவாமி!!!

கொரோனா தடுப்பு நிதிக்கான ஒதுக்கீட்டிற்கு அவசர சட்டத்தை கொண்டுவந்துள்ளார் பிரதமர் மோடி

மாமனார் வாங்கி வந்த மாவில் போண்டா செய்து சாப்பிட்ட மருமகள் உயிரிழப்பு!

மாமனார் வாங்கி வந்த போண்டா மாவில் போண்டா செய்து சாப்பிட்ட மருமகள் உயிரிழந்ததால் அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கொரோனா மருந்தை கொடுக்காவிட்டால்? இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மிக அதிகமாக கொரோனா வைரஸ் பரவி அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது 

ஏப்ரல் 14ல் நல்ல செய்தி வரும்: 'மாஸ்டர்' படத்தின் மாஸ்டர் நடிகரின் டுவிட்

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 9ம் தேதி ரிலீசாக வேண்டிய இந்த படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.