சாத்தான்குளம் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்ததாக புகார்

சாத்தான்குளம் தந்தை மகன் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் இருவரும் மர்மமாக மரணம் அடைந்தது குறித்த வழக்கை விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்ததாக சாத்தான்குளம் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி மீது புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து சாத்தான்குளம் ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரிக்கச் சென்ற மாஜிஸ்திரேட்டிடம் ஆவணங்களைத் தர மறுத்ததோடு, நீதிபதியை ஒருமையில் இழிவாகப் பேசியதாக சாத்தான்குளம் காவல்துறையினர் மீது புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் எஸ்.பி. குமார், டி.எஸ்.பி. பார்த்திபன் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் சாத்தான்குளம் கூடுதல் கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர் ஆகிய இருவரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சாத்தான்குளம் விவகாரத்தில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சாத்தான்குளம் ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

எலியும் பூனையுமாக சீறிக் கொள்ளும் இந்தியா-சீனா: அடிப்படை காரணம்தான் என்ன???

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நடக்கும் எல்லைப் பிரச்சனை இன்றைக்கு நேற்றைக்கு ஆரம்பித்தது அல்ல.

வந்துவிட்டது சீனாவின் கொரோனா தடுப்பூசி: இராணுவ வீரர்களுக்கு பயன்படுத்தி சோதனை!!!

சீனாவின் இராணுவ மருத்து அகாடமியின் அங்கமான கேன்சினோ நிறுவனமும் பெய்ஜிங்கின் பயோ டெக்னாலஜி

700% மின்கட்டணம் அதிகம்: 'காலா' நாயகியின் ஷாக்கிங் தகவல்

ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக மின்சார ரீடிங் எடுக்கப்படாததால் தற்போது மொத்தமாக நான்கு மாதங்களுக்கும் சேர்த்து மின்சார ரீடிங் எடுக்கப்பட்டு வருவதாகவும்

ஓடிடியில் ராகவா லாரன்ஸின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு? பரபரப்பு தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு 4000ஐ நெருங்கியுள்ள இன்றும் 4000க்கு மிக அருகே நெருங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.