தேடப்படும் குற்றவாளியாக பிரபல நடிகையை அறிவித்த நீதிமன்றம்.. உடனே கைது செய்ய உத்தரவு..!

  • IndiaGlitz, [Wednesday,February 28 2024]

கமல்ஹாசன், விஜயகாந்த் உட்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை தேடப்படும் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில் அவரை உடனே கைது செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் நடித்த ’சலங்கை ஒலி’ ’நினைத்தாலே இனிக்கும்’ ’தசாவதாரம்’ மற்றும் விஜயகாந்த் நடித்த ’ஏழை ஜாதி’ உள்பட பல தமிழ் திரைப்படங்களிலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் ஜெயப்பிரதா.

இவர் அரசியல்வாதியாகவும் இருக்கும் நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரம் செய்தபோது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக ராம்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராக ஜெயப்பிரதாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் தொடர்ச்சியாக ஏழு முறை சம்மன் அனுப்பப்பட்ட போதிலும் ஜெயப்பிரதா ஆஜராகவில்லை என்பதை அடுத்து பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் நடிகை ஜெயப்பிரதா திடீரென தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படும் நிலையில் அவர் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் இன்னும் ஒரு வாரத்தில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று காவல் துறைக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

நீயே ஒரு பிராடு, நீ முத்துவ சந்தேகப்படுறியா? 'சிறகடிக்க ஆசை' ரோஹினியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

முத்து ஒரு திருடனாக இருக்க வேண்டும் அல்லது திருடனின் நண்பனாக இருக்க வேண்டும் என்று ரோஹினி சந்தேகப்படும் நிலையில் 'நீயே ஒரு பிராடு, நீ முத்துவை சந்தேகப்படுறியா? என ரசிகர்கள் 'சிறக்கடிக்க ஆசை'

மாடர்ன் ட்ரெஸ்ஸில் வேற லெவல் லுக்.. பிக்பாஸ் ரக்சிதா மகாலட்சுமியின் போட்டோஷூட்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரக்சிதா மகாலட்சுமி பெரும்பாலும் சேலை காஸ்டியூமில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் திடீரென

43 வயதில் 2ஆம் திருமணம்.. விண்வெளி வீரரி மணந்த தனுஷ் பட நடிகை..!

நடிகர் தனுஷ் உட்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை ஒருவர் 43 வயதில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவர் விண்வெளி வீரரை திருமணம் செய்து கொண்டுள்ளதை அடுத்து

சந்தானம் அடுத்த படம்.. கமல்ஹாசன் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

உலகநாயகன் கமல்ஹாசன் சற்று முன் தனது சமூக வலைதளத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில்

ரிலீசுக்கு முன்பே ரூ.100 கோடி பிசினஸ்.. ரஜினிக்கு அடுத்து சூர்யா தான்: சொன்னது யார் தெரியுமா?

சூர்யாவின் அடுத்த படம் ரிலீசுக்கு முன்பே 100 கோடி ரூபாய் பிசினஸ் செய்து விட்டதாகவும் ரஜினிகாந்த் அவர்களுக்கு அடுத்து சூர்யாவின் படம் தான் அதிக பிசினஸ் செய்திருப்பதாகவும் 'கங்குவா'