close
Choose your channels

தன் நாட்டு பெண்களுக்காக 'பேட்மேனை' சந்தித்த பிராவோ

Thursday, July 4, 2019 • தமிழ் Comments

தமிழகத்தை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவர் மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் கடைபிடிக்கும் சுகாதாரமற்ற, தூய்மைக்குறைவான செயல்முறைகளைக் களைய மலிவான தீர்வைக் காண வேண்டியதன் தேவையை வெளிப்படுத்தியவர். வணிகமுறையில் தயாரிக்கப்படும் மாதவிடாய்க்கால 'பேட்'களைவிட மூன்றில் ஒரு பங்கு விலையில் தயாரிக்கக்கூடிய இயந்திரத்தைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமை பெற்றவர். இவருடைய கதையை வைத்துதான் இந்தியில் அக்சயகுமார் நடித்த 'பேட் மேன்' என்ற திரைப்படம் உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது

இந்த நிலையில் தற்போது தமிழகம் வந்திருக்கும் பிரபல மேற்கிந்திய தீவுகள் நாட்டின் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான பிராவோ, கோவை சென்று அருணாச்சலம் முருகானந்தம் அவர்களை சந்தித்தார்.

தங்கள் நாட்டு பெண்களுக்கும் மலிவான விலையில் சுகாதாரமான 'பேட்'கள் கிடைக்க அருணாச்சலம் அவர்கள் கண்டுபிடித்த இயந்திரத்தை நிறுவுவது குறித்த ஆலோசனைகளை பெற்றார். தன் நாட்டு பெண்களின் பிரச்சனையை தீர்க்க பிராவோ செய்து வரும் முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz