close
Choose your channels

பிக்பாஸ் புரமோவுக்கு '96' பின்னணி இசை ஏன்?

Thursday, July 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதன் புரமோவை சுவாரஸ்யமாக அமைத்து வரும் பிக்பாஸ் நிர்வாகத்தினர் இன்று வெளியிட்டுள்ள இரண்டாவது புரமோவிற்கு பின்னணி இசையாக விஜய்சேதுபதி-த்ரிஷா நடித்த '96' படத்தின் பின்னணி இசையை பயன்படுத்தியது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இன்றைய முதல் புரமோ பைத்தியக்கரத்தானமாக இருந்த நிலையில் இரண்டாவது புரமோவில் சாக்சியும், ஷெரினும் கவின் மற்றும் அபிராமி குறித்து பேசுகிறார்கள். “கவின் முழுசா மாறிவிட்டதாகவும், நைட் டின்னர் சாப்பிட்டு இருக்கும் போது ஏன் என்னாச்சு? ஏன் என்ன கூப்பிடலைன்னு கேட்டதுக்கு எனக்கு சுர்ருன்னு ஏறிடுச்சு அதான்னு கவின் சொன்னான், ஸோ, நான் அப்படியே நிறுத்திட்டேன்” என்று சாக்‌சி கூற அதற்கு ஷெரின் இத வந்து அபி பார்த்துகிட்டு இருக்கா, 'இப்போதைக்கு நாம ஃபிரெண்ட்ஸாவே இருப்போம். ஆனால் எதிர்காலத்துல எப்படி மாறும்ன்னு தெரியாது' என்று கூறியதாக சொல்கிறார்.

இடையிடையே அபி, கவின் காட்சிகளும் வருகிறது. இந்த புரமோ கடைசியில் முடியும்போது '96' படத்தின் பிரபலமான பின்னணி இசை ஒலிக்கின்றது. ஒரு அருமையான ரொமான்ஸ் படத்தின் பின்னணி இசையை பிக்பாஸ் குழுவினர் ஒலிக்க வைத்ததில் ஏதேனும் உள்குத்து உண்டா? என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.