ரொனால்டோவிற்கு கொரோனா பாதிப்பு: நாளை முக்கிய போட்டியில் ஆடவிருந்த நிலையில் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Tuesday,October 13 2020]

போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் அவரது மில்லியன் கணக்கான ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் உலக அளவில் பல விவிஐபிக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் போர்ச்சுகல் அணியின் கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது

இன்று போர்ச்சுகல் அணியின் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ரொனால்டோவிற்கு கொரோனா பாசிட்டிவ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. போர்ச்சுகல் தேசிய லீக் போட்டிகளில் ரொனால்டோ ஆட இருந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த தொடரில் இருந்து ரொனால்டோ விலகி உள்ளார். அந்நாட்டின் சட்டப்படி அவர் 15 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

ரொனோல்டாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் போர்ச்சுகல் அணியில் வேறு யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதால் நாளை திட்டமிட்டபடி ஸ்வீடன் அணிக்கும் போர்ச்சுகல் அணிக்கும் இடையில் கால் பந்து போட்டி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

More News

அச்சு அசலாக முரளிதரனாக மாறிய விஜய்சேதுபதி! வைரலாகும் மோஷன் போஸ்டர்!

பிரபல இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும்

தினம் ஒரு வீடியோ: ரஜினியின் மெகா திட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக தான் அரசியல் கட்சி தொடங்குவது தாமதமாகி வருவதாகவும்

என்னதான் நடக்குது… கண்ணீர் சிந்திய அதிபரைப் பார்த்து வியக்கும் வடகொரிய மக்கள்!!!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, தொடர்ந்து மற்ற நாடுகளைப் பயமுறுத்தும் அளவிற்கு அணு ஆயுதப் பரிசோதனை,

ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் 'பரிசு': கமல்ஹாசன்

2020 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு நேற்று அறிவிக்கப்பட்டது என்பதும், பால் மில்க்ரோம், ராபர்ட் வில்சன் ஆகிய இரண்டு அமெரிக்கர்களுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

கல்லூரி வளாகத்திற்குள் இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை… உபியில் தொடரும் அவலம்…

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஹத்ராபாஸ் பாலியல் வழக்கு தவிர உத்திரப்பிரதேசத்தின் அலிகார் பகுதியில் கடந்த மாதம் இன்னொரு ஒரு பாலியல் வழக்கும் பதிவானது.