close
Choose your channels

அச்சு அசலாக முரளிதரனாக மாறிய விஜய்சேதுபதி! வைரலாகும் மோஷன் போஸ்டர்!

Tuesday, October 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் டைட்டில் ‘800’ என்றும் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த திரைப்படம் முத்தையா முரளிதரனின் கிரிக்கெட் வாழ்க்கையை மட்டும் குறிப்பிடும் படம் என்று கூறப்பட்டது. ஆனால் மோஷன் போஸ்டரில் கிரிக்கெட் காட்சிகள் மட்டுமின்றி இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடுகள் போன்ற காட்சிகளும் இருப்பதால் ஈழத்தமிழர்களின் எதிர்ப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் அச்சு அசலாக முரளிதரன் போலவே விஜய் சேதுபதி மாறியிருப்பது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.