இதுவல்லவா போனஸ்… தவறுதலாக 1,300 கோடியை வாரி இறைத்த வங்கி!

  • IndiaGlitz, [Monday,January 03 2022]

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல வங்கி ஒன்று கிறிஸ்துமஸ் தினத்தில் தனது 75 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு 130 மில்லியன் பணத்தை தவறுதலாக அனுப்பிவிட்டது. இதனால் மகிழ்ச்சிக் கடலில் தத்தளித்த வாடிக்கையாளர்கள் பலரும் தங்களுக்கு கிறிஸ்துமஸ் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு இருப்பதாக நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

சான்டாண்டர் எனும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வங்கி ஒன்று தனது வங்கியில் சம்பளக் கணக்கு வைத்திருக்கும் 75 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு சம்பளத்தை அனுப்பியிருக்கிறது. இதைத் தொடர்ந்து மீண்டும் இரண்டாவது முறையும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி கணக்கில் இருந்து தவறுதலாக பணம் அனுப்பப்பட்டு இருக்கிறது.

இதனால் முதலில் அதிர்ச்சி வெளியிட்ட பலரும் தங்களுக்கு கிறிஸ்துமஸ் போனஸ் வழங்கப்பட்டு இருப்பதாக நினைத்து மகிழ்ச்சிக் கடலில் துள்ளிக்குதித்து இருக்கின்றனர். ஆனால் இதுகுறித்து பேசிய வங்கி நிர்வாகம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 75 ஆயிரம் வாடிக்கையாளர் கணக்குகளுக்கு 130 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் 1,310 கோடி அனுப்பப்பட்டு விட்டது. இந்தப் பணத்தை நாங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்பப் பெற்றுக்கொள்வோம் எனத் தெரிவித்து உள்ளனர்.

ஆனால் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி இந்தச் சம்பவம் நடைபெற்றதால் வாடிக்கையாளர்கள் பலரும் தங்களது பணத்தை செலவழித்துவிட்டதாகத் தெரிவித்து உள்ளனர். இன்னும் சிலர் இது கிறிஸ்துமஸ் போனஸ் தொகை கிடையாதா? என அப்பாவித் தனமாக? கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.

More News

நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா? விரைவில் ஹீரோ ஆவாரா?

நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது மகன் மற்றும் கணவருடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு

'நீங்க சும்மா கத்தாதீங்க': தாமரையுடன் மோதும் இன்னொரு போட்டியாளர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காரசாரமாக போட்டியாளர்கள் சண்டை போட்டுக் கொள்வதும் வெள்ளிக்கிழமை இரவு திடீரென ஒற்றுமையுடன் கட்டிப் பிடித்துக் கொள்வதுமான காட்சிகளை

தாமரை செல்வியை எனக்கு 10 வருஷத்துக்கு முன்பே தெரியும்: சூப்பர் சிங்கர் பிரபலம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான தாமரைச்செல்வியை எனக்கு 10 வருடங்களுக்கு முன்பே தெரியும் என விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்

உச்சகட்ட கவர்ச்சி களத்தில் இளம் நடிகைகள்: வைரல் புகைப்படங்கள்!

கடந்த சில வருடங்களுக்கு முன் வரை குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்கள் தற்போது கவர்ச்சி களத்தில் குதித்து நாயகியாக முயற்சி செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தனுஷின் 'வாத்தி' படத்தின் முக்கிய அப்டேட்: ரசிகர்கள் குஷி!

தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் 'வாத்தி' என்றும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்க