close
Choose your channels

நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா? விரைவில் ஹீரோ ஆவாரா?

Monday, January 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது மகன் மற்றும் கணவருடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா? என்றும் விரைவில் அவர் ஹீரோ ஆகி விடுவார் என்றும் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் கடந்த 1985ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் நடித்த ’படிக்காதவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் ’ஜல்லிக்கட்டு’ ’முதல் வசந்தம்’ ’பேர் சொல்லும் பிள்ளை’ ’வானமே எல்லை’ உள்பட பல படங்களில் நடித்தாலும் அவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை பெற்றுக் கொடுத்தது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த ’படையப்பா’ திரைப்படம் தான்.

அதன்பின்னர் ’பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ ஆகிய திரைப்படங்கள் அவருக்கு உச்சக்கட்ட புகழைக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது 40 வயதை கடந்தாலும் குணசித்திர வேடங்களில் பிசியான நடிகையாக இருந்து வருகிறார் என்பதும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் கடந்த 2003ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ரித்விக் என்ற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது 17 வயது ஆகியிருக்கும் ரித்விக்கின் புகைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா? என்றும் விரைவில் அவர் ஹீரோவாக வாய்ப்பிருப்பதாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.