நம்ம அடி வாங்குறாங்க பக்கம்தான் நிக்கணும்: 'கழுவேத்தி மூர்க்கன்' படம் குறித்து டி இமான்..!

  • IndiaGlitz, [Friday,July 14 2023]

அருள்நிதி நடிப்பில் கௌதம் ராஜ் இயக்கத்தில் உருவான ‘கழுவேத்தி மூர்க்கன்’ என்ற திரைப்படம் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றது என்பதையும் பார்த்தோம்.

திரையரங்குகளை அடுத்து இந்த படம் ஓடிடியிலும் வெளியாகி குடும்ப ஆடியன்ஸ்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளன. இந்த நிலையில் இந்த படம் குறித்தும் இந்த படத்தின் கதையம்சம் குறித்தும், அதில் சொல்லப்பட்டிருக்கும் சமூக கருத்துக்கள் குறித்தும் இன்னும் சமூக வலைதளங்களில் விவாதம் ஆகி வருகிறது.

இந்த படம் வெளியாகி 50 நாட்களுக்கு மேல் ஆகியும் இந்த படம் குறித்த விவாதம் நடந்து கொண்டிருப்பதை அறிந்த இந்த படத்தின் இசையமைப்பாளர் டி இமான் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

50 நாட்களாக தொடர்ந்து சமூக ஊடகங்களில் கழுவேத்தி மூர்க்கனை' பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தலைவர்களும் திரை ஆளுமைகளும் முற்போக்காளர்களும் பல மேடைகளில் படத்தினை பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். படம் சார்ந்த கூட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. பத்துக்கும் மேலான காட்சிகள் தனியாக சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

ஒரு நல்ல திரைப்படம் என்பது சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும், ஏதோ ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும், படம் பேசும் தளத்திலான சூழல்கள் உருவாகும் போது படம் மீண்டும் திரும்பிப் பார்க்கப்பட வேண்டும். அதுவே வெற்றி.

50 நாட்களாக கழுவேத்தி மூர்க்கன் அவ்வேலையை செய்தபடி பயணித்துக் கொண்டே இருக்கிறான், நம்ம அடிவாங்குறவங்க பக்கம்தான் நிக்கணும், அவங்கள அடி வாங்காம பார்த்துக்கணும்.. கழுவேத்திமூர்க்கன். தோள் கொடுத்தவர்களுக்கு கை குலுக்கி நன்றிகளும் பூங்கொத்துக்களும்.. தொடர்கிறது பயணம்..

More News

'மாவீரன்' படம் பார்க்க வந்த விஜய் மனைவி சங்கீதா.. இன்னும் யாரெல்லாம் வந்துருக்காங்க பாருங்க..!

 சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் இடைவேளை வரையிலான விமர்சனம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இன்னும் படமே ஆரம்பிக்கலை...  அதற்குள்ள பப்ளிக் ரிவிவ்யூ... எப்படிர்ராராராரா.. கலாய்த்த பிரபல தயாரிப்பாளர்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

பயந்தவனுக்கு தினம் தினம் சாவு, துணிஞ்சவனுக்கு ஒரு நாள் தான் சாவு: சந்தானம் நடித்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' டிரைலர்..!

சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' மற்றும் 'தில்லுக்கு துட்டு 2' ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த தொடரின் அடுத்த படம் 'டிடி ரிட்டர்ன்ஸ்' என்ற டைட்டிலில் வெளியாக உள்ளது

தென்னிந்தியாவில் தடம்பதித்த முதல் ஏஐ செய்தி வாசிப்பாளர்… சுவாரசியமான சிறப்பு அம்சம்!

முன்னதாக வட இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட மெய்நிகர் செய்தி வாசிப்பாளர் ‘லிசா‘, ‘சனா‘என்று இரு செயற்கை வாசிப்பாளர்கள் அறிமுகப்படுத்தப் பட்ட நிலையில்

'தளபதி விஜய் பயிலகம்': தொடங்கும் தேதியை அறிவித்த புஸ்ஸி ஆனந்த்..!

தளபதி விஜய் தமிழக முழுவதும் இரவு நேர பாடசாலை அமைக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இதனை விஜய் மக்கள் மன்றத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் உறுதி செய்துள்ளார்.