விஜய் திரைப்படத்தை குறிப்பிட்டு தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து கூறிய டி.இமான்!

  • IndiaGlitz, [Tuesday,April 14 2020]

உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் இன்று தமிழ்ப்புத்தாண்டு தினத்தை கொண்டாடி வரும் நிலையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் இன்று தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் டி.இமான், தளபதி விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தை குறிப்பிட்டு தனது தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியான திரைப்படம் ‘தமிழன்’. இந்த படத்தில் தான் டி.இமான் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் என்பதும் அப்போது அவருக்கு வெறும் 17 வயதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டி.இமான் தனது சமூக வலைத்தளத்தில், ‘இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு ஒரு கடினமான சூழ்நிலையில் கொண்டாடுகிறோம். விரைவில் ஒரு நல்ல நாள வரும் என்று எதிர்பார்ப்போம். இந்த நாள் நான் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படமான ’தமிழன்’ படம் ரிலீஸ் ஆன நாள். எனது 18 ஆண்டு திரை இசை பயணத்தில் ஒரு அங்கமாக இருந்த எனது இசை ஆர்வலர்கள் அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்.

More News

வெளியே போனால் அரசாங்கம் என்னை எடுத்துக்கும்: ஒரு சிறுவனின் க்யூட் வீடியோ

நாடு முழுவதும் 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து இன்று காலை நாட்டு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக

சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு உதயநிதி செய்த நிதியுதவி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்கனவே 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு முடிந்திருந்த நிலையில் தற்போது மேலும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதுவும் கடந்து போகும்: ரஜினியின் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து

இன்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் கொரோனா வைரஸ் பீதியையும் தாண்டி தமிழ்ப்புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் தமிழ்ப்புத்தாண்டு

மாண்ட மருத்துவருக்கு சிதை நெருப்பு தர மனமில்லையா? சீனுராமசாமி ஆவேச கவிதை

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த ஆந்திர மருத்துவர் ஒருவரை தகனம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என நேற்று முதல் அம்பத்தூர் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

தமிழ்ப்புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்!

இன்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் தமிழ்ப்புத்தாண்டு தினத்தையும் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் அம்பேத்கர் பிறந்த நாளையும் கொண்டாடி வரும் நிலையில் நடிகரும்