தனுஷூடன் 4வது முறையாக இணையும் இயக்குனர்!

  • IndiaGlitz, [Thursday,January 02 2020]

தனுஷ் நடித்த மூன்று திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஒருவர் மீண்டும் நான்காவது முறையாக அவரது படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

தனுஷ் நடித்த ‘பட்டாஸ்’ திரைப்படம் வரும் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து அவர் ’பரியேறும்பெருமாள்’ மாரி செல்வராஜ் மாரி செல்வராஜ், ராட்சஸன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளா

இந்த நிலையில் தனுஷின் 44வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும், இந்தப் படத்தை தனுஷ் இயக்கி நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இதில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தனுஷ் கதை திரைக்கதை வசனம் எழுதிய இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குவார் என்று கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த ’யாரடி நீ மோகினி’, ’உத்தமபுத்திரன்’ மற்றும் ’குட்டி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் தனுஷ்-மித்ரன் ஜவஹர் ஆகியோர் நான்காவது முறையாக மீண்டும் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

நானும் கான்ஸ்டபிளும் தப்பு செஞ்சோம்: ஒரு இளம்பெண்ணின் ஆடியோ வைரல்!

நானும் கான்ஸ்டபிள் ஒருவரும் தப்பு செய்துவிட்டோம், ஆனால் தற்போது அவர் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார் என இளம்பெண் ஒருவரின் ஆடியோ வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

இந்தியாவிலேயே முதல்முறையாக, உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருநங்கை..!

நாமக்கல் மாவட்டத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட திருநங்கை ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

ஒபாமாவுக்கு பிடித்த இந்திய பாடல் எது தெரியுமா..?

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 2019 ஆண்டு தனக்கு படித்த பாடல்கள் என்று பதிவிட்டிருந்தார்.அந்த பட்டியலில் இசையமைப்பாளர் பிரதீக் குஹத் எழுதிய 'Cold/Mess' என்ற பாடல் இடம்பிடித்துள்ளது.  

வரப்போகிறது ஜியோ மார்ட்..! ஆஃபர்களை அள்ளிக் கொடுக்க தயாராகும் அம்பானி.

Flipkart, Amazon நிறுவனங்களுக்குப் போட்டியாக ரிலையன்ஸ் நிறுவனம், JioMart என்கிற ஆன்லைன் வர்த்தக முறையை அறிமுகம் செய்ய உள்ளது.

"புகார் கொடுங்க.. H.ராஜாவையும் கைது செய்கிறோம்"..! அமைச்சர் ஜெயக்குமார்.

நெல்லை கண்ணன் கைது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.