'டாடா' இயக்குனரின் அடுத்த படத்தில் ஹீரோ, ஹீரோயின் யார்? ஆச்சரிய தகவல்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடித்த ’டாடா’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலிலும் சாதனை செய்தது. இதுவரை வெளியான கவின் படங்களில் ’டாடா’ படம் தான் அதிக வசூல் செய்த படமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’டாடா’ படத்தை இயக்கிய இயக்குனர் கணேஷ் பாபு இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் ஹீரோ ஹீரோயின் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தில் துருவ் விக்ரம் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி இந்த படத்தில் ஜீவா நடிக்க இருப்பதாக தெரிகிறது. இது ஒரு ரொமான்ஸ் காமெடி திரைப்படம் என்றும் இந்த படத்தின் நாயகி ஆக டாடி ஜிவால் என்பவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஒரு சில மியூசிக் வீடியோக்களில் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் ஜீவா மற்றும் டாடி ஜிவால் நடிக்க இருக்கும் தகவல் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments