முதல்வர் ஸ்டாலினுக்கு டான்ஸ் கற்று கொடுத்த பிருந்தா: வைரல் வீடியோ

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு டான்ஸ் மாஸ்டர் பிருந்தா நடனம் கற்றுக் கொடுத்த வீடியோ அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இதன் தொடக்கவிழா நேற்று முன்தினம் சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது என்பதும் தெரிந்ததே.

தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதை அடுத்து இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் செஸ் ஆன்ந்தம் பாடல் ஒன்று வெளியானது. இந்த பாடலில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் உள்பட பலர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இந்த பாடலில் தோன்று காட்சியை நடன இயக்குனர் பிருந்தா சொல்லிக்கொடுத்த வீடியோ அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் டான்ஸ் ஸ்டெப்ஸ்களை பிருந்தா சொல்லி கொடுத்தார்.

முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுடன் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று பிருந்தா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

துப்பாக்கி சுடும் போட்டி: தங்கம், வெள்ளி பதக்கங்களை அள்ளிய அஜித்!

திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பங்குகொண்ட அஜித் அணி தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை அள்ளியதாக தகவல் வெளியாகியுள்ளன. 

மறுபடியும் வர்றோம், இந்த வாட்டி லைட் ஹார்ட்டோட: தனுஷ் குறித்து அனிருத்

தனுஷ் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள வீடியோவில்

பாரீஸ் ஈஃபிள் டவர் முன் செம கிளாமர் உடையில் தமிழ் நடிகை: வீடியோ வைரல்

 தமிழ் திரை உலகின் திறமையான நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் பாரீஸ் சுற்றுப்பயணம் செய்திருக்கும் நிலையில் அங்கு உள்ள ஈபிள் டவர் முன் கிளாமர் உடையில் எடுத்த போட்டோ ஷூட்

வார்த்தைகள் அற்று திகைத்துப் போய் நிற்கிறேன்: தனுஷ் அறிக்கை

 வார்த்தைகள் அற்று திகைத்துப் போய் நிற்கிறேன் என தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிக்கை விட்டுள்ளார். இந்த அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது. 

இரண்டே இரண்டு படம் தான்: ஆடிக்கார் வாங்கிய இயக்குனருக்கு குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் திரை உலகில் இரண்டே இரண்டு படம் இயக்கிய இயக்குநர் ஆடி கார் வாங்கியதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.