close
Choose your channels

இரண்டே இரண்டு படம் தான்: ஆடிக்கார் வாங்கிய இயக்குனருக்கு குவியும் வாழ்த்துக்கள்!

Friday, July 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகில் இரண்டே இரண்டு படம் இயக்கிய இயக்குநர் ஆடி கார் வாங்கியதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தமிழ் திரையுலகில் பாடகராகவும் பாடலாசிரியராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் இயக்குநர் அருண்ராஜா காமராஜ். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த ’கனா’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் சீனாவிலும் ரிலீசாகி நல்ல வசூலை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் உதயநிதி நடிப்பில் உருவான ’நெஞ்சுக்கு நீதி’ என்ற திரைப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கிய நிலையில் இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இரண்டே படங்கள் மட்டும் இயக்கிய இயக்குனர் அருண் ராஜா காமராஜ் தற்போது ஆடி கார் வாங்கியுள்ளார். தனது புதிய ஆடி காருடன் அவர் தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.