இயக்குனர் கவுதம்மேனனுக்கு ஜெயலலிதா அண்ணன் மகன் எச்சரிக்கை

  • IndiaGlitz, [Thursday,September 12 2019]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை இயக்குனர் விஜய் ‘தலைவி’ என்ற பெயரில் இயக்கி வரும் நிலையில், இயக்குனர் கவுதம்மேனன், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘குவீன்’ என்ற பெயரில் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார்.

இந்த வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வெப் சீரீஸ்க்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, ‘ஜெயலலிதா குறித்து ‘தலைவி’ என்ற படத்தை இயக்கப்போவதாக இயக்குநர் விஜய் எங்களிடம் ஏற்கனவே முன் அனுமதி பெற்றிருந்தார். கெளதம் மேனன் இயக்கும் ‘க்வீன்’ என்ற வெப் சீரிஸ் யாரை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்று தீபக் கூறியுள்ளார்.

மேலும் எங்கள் குடும்பத்தின் அனுமதியின்றி ஜெயலலிதா குறித்து படமோ, வெப் சீரிஸோ எடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தீபக் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து ‘குவீன்’ வெப் சீரிஸ் திட்டமிட்டபடி வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது

More News

நடிகர் செந்திலுக்கு பிரபல அரசியல் கட்சியில் புதிய பதவி

நடிகர் செந்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் தினகரனின் அமமுகவில் இணைந்த நிலையில் தற்போது அவருக்கு அக்கட்சியில் புதிய பதவி கிடைத்துள்ளது

பிக்பாஸ் வீட்டில் 'வாயாடி பெத்த பொண்ணு'

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று தர்ஷனின் அம்மா மற்றும் சகோதரி வந்ததாக முதல் புரமோவில் பார்த்தோம் 

பிரபல தமிழ்ப்பட நடிகைக்கு பெண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்

ஆரி நடித்த 'நெடுஞ்சாலை', கலையரசன் நடித்த 'அதே கண்கள்', உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஷிவேதா. இவர் சமீபத்தில் தனது நீண்டநாள்

இதுவரைக்கும் பார்க்காத விஜய்க்கு நான் கியாரண்டி: லோகேஷ் கனகராஜ்

விஜய் நடித்து முடித்துள்ள 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க உள்ள 'தளபதி 64' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது

விஷாலின் ஆக்சன்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வந்த அதிரடி ஆக்சன் திரைப்படமான 'ஆக்சன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வெளிநாட்டில் நடைபெற்று