திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவலா? போலீசார் தீவிர சோதனை

  • IndiaGlitz, [Thursday,October 03 2019]

உலகம் முழுவதிலும் உள்ள வழிபாட்டு தலங்களில் தீவிரவாதிகளின் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத்தலம் உள்ள திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கலாம் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையால் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். திருப்பதி மட்டுமின்றி தலைநகர் டெல்லியிலும் தீவிரவாதிகள் ஊடுருவியிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

திருப்பதியில் தற்போது பிரம்மோற்சவம் நடைபெற்று வருவதால் அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவி நாச வேலையில் ஈடுபடலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் திருப்பதியில் மத்திய, மாநில உளவுத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமிராக்களும் 24 மணி நேர கண்காணிப்பில் உள்ளதாகவும், இரவுபகலாக சுமார் 3500 போலீசார் துப்பாகி உள்பட ஆயுதங்களுடன் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதேபோல் டெல்லியிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு பகுதிகளில் சிறப்பு படை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நடிகர் சங்கம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை எப்போது? சென்னை உயர்நீதிமன்றம்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் 23ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இருப்பினும் இந்த தேர்தல் சம்மந்தப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததால்

'தளபதி 64' பட பூஜையை கொண்டாடிய டுவிட்டர்!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 64' திரைப்படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது என்பதும், இந்த பூஜையில் விஜய், விஜய்சேதுபதி, சாந்தனு,

'தளபதி 64' குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த 'தளபதி 63' தயாரிப்பாளர்

விஜய் நடிக்க உள்ள 64வது திரைப்படமான 'தளபதி 64' திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் இந்த பூஜையில் விஜய், விஜய்சேதுபதி,

'தளபதி 64': எளிமையான பூஜையில் விஜய்-விஜய்சேதுபதி!

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 64' படத்தின் பூஜை இன்று நடைபெறும் என வெளிவந்த செய்தியை நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

'விஜய்யின்' வெறித்தனம் பாடலை டிக்டாக் செய்த பிரபல இயக்குனரின் மகள்

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி உள்ளன.