close
Choose your channels

'டிமாண்டி காலனி 2' ரிலீஸ் எப்போது? த்ரில் வீடியோவை வெளியிட்ட அஜய் ஞானமுத்து..!

Friday, July 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான ’டிமான்டி காலனி’ என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் எட்டு ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த த்ரில் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார் என்பதும் இந்த வீடியோவில் இந்த படத்தின் மேக்கிங் காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று இந்த வீடியோவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் நிறைவேறு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் பாகத்தில் நாயகனாக நடித்த அருள்நிதி, இரண்டாம் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் நாயகியாக பிரியா பவானிசாகர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சாம் சிஎஸ் இசையில், ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில், குமரேஷ் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படம் முதல் பாகம் போலவே வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment