ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகன் அவரிடமே பணிபுரிந்தவரா? ஆச்சரிய தகவல்!

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்களின் மகள் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்ததாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம், இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகன் அவருடன் பணிபுரிந்தவர் என்ற தகவல் தற்போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் மகள் கதீஜா என்பவருக்கும் ரியாஸ் என்பவருக்கும் கடந்த 29ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பதும் இந்த நிச்சயதார்த்தத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் எனக்கும் ரியாஸ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது என்றும், என்னுடைய பிறந்த நாளில் என்னுடைய நிச்சயதார்த்தம் நடந்தது மிகவும் மகிழ்ச்சி என்றும், இந்த நிச்சயதார்த்தத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டார்கள் என்றும் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகளை திருமணம் செய்யப்போகும் ரியாஸ் ஒரு சவுண்ட் இன்ஜினியர் என்றும் இவர் பல பிரபல இசையமைப்பாளர்களிடம் பணி புரிந்துள்ளார் என்பதும் குறிப்பாக ஏஆர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ’தமாஷா’ என்ற இந்தி திரைப்படத்திலும் அவர் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஏஆர் ரஹ்மான் தன்னிடம் பணிபுரிந்த ஒருவரையே தனது மருமகனாக்கி உள்ளார் என்ற உண்மை தற்போது தெரிய வந்துள்ளது.

More News

வெளியேறியதும் சஞ்சீவ் யாரை பார்த்தார் தெரியுமா? வைரல் புகைப்படம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படும் நிலையில் நேற்று சஞ்சீவ் வெளியேற்றப்பட்டார் என்பது நேற்றைய நிகழ்ச்சியை

மலர்மாலை போட்ட பாவனியை கடுமையாக விமர்சனம் செய்த ராஜூ!

பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது என்பதும் அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது, 

'நாய்சேகர்' படத்தில் செல்லப்பிராணிக்கு குரல் கொடுத்த பிரபல ஹீரோ: நன்றி சொன்ன சதீஷ்!

சதீஷ் ஹீரோவாக நடித்து வரும் 'நாய்சேகர்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் டீசர் உள்பட

'வலிமை' படத்தின் பின்னணி இசை யுவன் இல்லையா? இந்த பிரபல இசையமைப்பாளரா?

அஜித் நடித்து முடித்துள்ள 'வலிமை' திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை

பிரியங்காவை பாராட்டிவிட்டு நிரூப்பை சேவ் செய்த பார்வையாளர்!

பிரியங்காவை பாராட்டிவிட்டு நிரூப்பை சேவ் செய்த பார்வையாளரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.