எங்க கை வச்சு தள்றான் தெரியுமா என்னை? ஆவேசமாகும் தனலட்சுமி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க்கில் இரண்டு குழுவினராக பிரிந்து ஒருவருக்கொருவர் மோதி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக ஷெரின் நேற்று தனக்கு அடிபட்டது போன்ற ஒரு நாடகத்தை நடத்தினார் என்பதும் தனலட்சுமி மீது அசீம் வீண் பழி சுமத்தினர் என்பதும் பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் போட்டியாளர்கள் மத்தியில் இரண்டு பிரிவுகள் இருப்பது வழக்கமாக இருக்கும் நிலையில் இந்த பொம்மை டான்ஸ் மூலம் 6வது வது சீசனிலும் இரண்டு பிரிவுகள் உருவாகிவிட்டது.

ஷிவின், தனலட்சுமி உள்பட ஒருசிலர் ஒரு பிரிவிலும், அசீம், மகேஸ்வரி உள்பட ஒரு சிலர் இன்னொரு பிரிவில் உள்ளனர். இந்த இரு பிரிவுகளும் திட்டம் போட்டு ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய பொம்மை டாஸ்க்கில் தனலட்சுமி மிக ஆவேசமாக அசீம் மீது குற்றம்சாட்டும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ‘அவன் என்னை எங்கே கைவைத்து தள்றான் தெரியுமா? அவனை நான் சும்மா விடமாட்டேன்’ என தனலட்சுமி ஆவேசமாகப் பேச தனலட்சுமிக்கு ஆதரவாக விக்ரமன் அசீமிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். தனலட்சுமியை எங்கே கைவைத்து அசீம் தள்ளிவிடுகிறார் என்பது இன்றைய முதல் புரமோ வீடியோவில் தெள்ளத்தெளிவாக தெரிவதால் அசீமுக்கு இந்த முறை ஆப்பு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் இந்த பஞ்சாயத்தை தீர்க்கும் ஒரே நபர் கமல்ஹாசன் மட்டும்தான் என்பதால் இந்த வாரம் கொஞ்சம் கடுமையாகவே கமல்ஹாசன் தவறு செய்த போட்டியாளர்களை கண்டிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பாஜக பெண் தலைவர் மீது புகார் அளித்த சினேகன்: வழக்குப்பதிவு செய்த போலீசார்!

தமிழக பாஜகவின் மாநில துணை தலைவர் மீது பாடலாசிரியர் சினேகன் புகார் அளித்துள்ள நிலையில் அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

'அவளுக்கு பழசெல்லாம் ஞாபகம் வராதவரைக்கும் ஆபத்து இல்லை': அஞ்சலியின் 'ஜான்சி' டிரைலர்

தமிழ் திரை உலகின் நடிகைகளில் ஒருவரான அஞ்சலி நடித்த 'ஜான்சி' என்ற வெப்தொடர் இன்று வெளியாக இருக்கும் நிலையில் இதன் ட்ரெய்லர் இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

இத்தாலியில் பிகினி உடையில் தீபாவளி கொண்டாடிய தமிழ் நடிகை!

கடந்த 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பதும் குறிப்பாக தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் உள்பட இந்திய திரையுலகினர் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள்

தேசிய சாதனை படைத்திட்ட தஞ்சைப்பெண்ணுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!

போல் வால்ட் விளையாட்டில், தேசிய சாதனை படைத்திட்ட தஞ்சைப்பெண் ரோசி மீனா, திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். 

இதைவிட தெளிவாக யாரும் சொல்ல முடியாது: 'காந்தாரா' குறித்து ரஜினிகாந்த் டுவிட்!

 சமீபத்தில் வெளியான கன்னட திரைப்படமான 'காந்தாரா' தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதை பார்த்தோம்.