விக்ரமனுக்கு ஃப்ரீ அட்வைஸ் கொடுக்கும் தனலட்சுமி.. என்ன சொன்னார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் இந்த நிகழ்ச்சியை போட்டியாளரகள் சரியாக புரிந்து கொண்டு விளையாடி வருவதாகவே தெரிகிறது.

குறிப்பாக விக்ரமன் நிகழ்ச்சியை முழுவதுமாகப் புரிந்துகொண்டு மெச்சூரிட்டியுடன் விளையாடுவதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று வைக்கப்பட்ட டாஸ்க்கில் வெற்றி பெற்ற தனலட்சுமி அனைவருக்கும் ஃப்ரீ அட்வைஸ் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. இதனை அடுத்து அவர் ஒவ்வொரு போட்டியாளருக்கும் தனது அட்வைஸ் கூறுகிறார்.

அப்போது அவர் விக்ரமனுக்கு கூறும்போது ’ஒரு விஷயத்தை நீங்கள் பேசும்போது அவருடைய கேரக்டருக்கு அது பொருந்துமா என்பதை புரிந்து கொண்டு பேச வேண்டும் என்று கூறினார். அதேபோல் ராமுக்கு அவர் அட்வைஸ் கொடுக்கும்போது நான் வேலை செய்யவில்லை என்று சொல்கிறார்கள், ஜெயிலில் வைக்குறார்கள் என்று கூறும் நீங்கள் அதற்கேற்றபடி நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

ஷிவின் பற்றி கூறியபோது முதலில் இருந்த ஆக்டிவான ஷிவின் தற்போது இல்லை என்று கூறுகிறார். அசீம் குறித்து கூறிய போது ’நீங்கள் பேசவேண்டும் என்பதற்காக பேசாமல் இரு தரப்பின் கருத்தை கேட்ட பிறகு பேச வேண்டும்’ என்று கூறுகிறார்.

இவ்வாறு ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு தனலட்சுமி ஃப்ரீ அட்வைஸ் கொடுக்கும் காட்சிகள் இன்றைய முதல் புரமோ வீடியோவில் உள்ளது.

More News

நேற்று கமல்ஹாசனின் 234வது பட அறிவிப்பு.. அப்ப 233வது பட இயக்குனர் யார்?

கமலஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகும் திரைப்படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது

'ஆதி புருஷ்' படத்தின் மூன்றாவது ரிலீஸ் தேதி: இதிலாவது ரிலீஸ் ஆகுமா?

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்த 'ஆதி புருஷ்' என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே இரண்டு முறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது முறையாக புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. 

ட்ரிம் செய்யப்பட்ட கமல்ஹாசனின் சாதனைப்படம்: இந்த முறை வெற்றி பெறுமா?

உலகநாயகன் கமல்ஹாசனின் சாதனை படம் ஒன்று கடந்த 2001ஆம் ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் தற்போது அதே திரைப்படம் ட்ரிம் செய்யப்பட்டு ரிலீசாக இருப்பதாகவும்

என்னை மகிழ்விக்க நானே போதும், ஆண் துணை தேவையில்லை: அஜித், விஜய் பட நடிகை

 அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் நடித்த நடிகை என்னை மகிழ்வித்து கொள்ள நானே போதும் என்றும் எனக்கு ஆண் துணை தேவை இல்லை என்றும் வீடியோ ஒன்றில் கூறியிருப்பது

உலகில் எதுவும் இலவசம் இல்லை, டுவிட்டருக்கு கட்டணம் வசூலிப்பது சரிதான்: பிரபல நடிகை

டுவிட்டரில் புளூடிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மாதம் 8 டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என அந்நிறுவனத்தை சமீபத்தில் வாங்கிய எலான் மஸ்க் அறிவித்த நிலையில் எதுவுமே உலகில் இலவசம் இல்லை