close
Choose your channels

நேற்று கமல்ஹாசனின் 234வது பட அறிவிப்பு.. அப்ப 233வது பட இயக்குனர் யார்?

Monday, November 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமலஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகும் திரைப்படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. மேலும் இந்த படம் கமல்ஹாசனின் 234வது திரைப்படம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் 232வது திரைப்படம் என ஏற்கனவே கூறப்பட்டது. இதனை அடுத்து யார் 234வது திரைப்படத்தின் அறிவிப்பு வெளி வந்துள்ளதை அடுத்து 233வது திரைப்படம் என்ன ஆச்சு? என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

கமல்ஹாசனின் 233வது திரைப்படம் ’இந்தியன் 2’ என்று ஒருசிலர் கூறினாலும் ’இந்தியன் 2’ படம் ‘விக்ரம்’ படத்திற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டதால் அது 231வது படம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அப்படி என்றால் 233வது படத்தை இயக்க போவது யார் என்ற தகவல் தற்போது கசிந்து வருகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் குறித்த தகவல்கள் சமீபத்தில் வெளியானது. இந்த படம்தான் கமல்ஹாசனின் 233வது படம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசன் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் ஒரு படம் உருவாக இருப்பதாகவும் இது தான் 233வது படம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 234 வது படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்த கமல்ஹாசன் விரைவில் 233வது படம் எது என்பதையும் அறிவிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இன்று கமல்ஹாசன் தனது 68வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் தனது 233வது படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.