தனுஷின் 'அம்மா கணக்கு' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,January 20 2016]

தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்து வரும் 'அம்மா கணக்கு' என்ற படத்தின் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றதை ஏற்கனவே அறிவித்தோம்.


இந்த படம் பாலிவுட்டில் ரிலீஸ் ஆன Nil Battey Sannata' என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பதும் அம்மா மற்றும் மகள் உறவை வெளிப்படுத்தும் உணர்வு பூர்வமான படம் என்பதும் நாம் அறிந்ததே.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

அம்மாவாக ரேவதியும், மகளாக அமலாபாலும் நடிக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை இந்தியில் Nil Battey Sannata' படத்தை இயக்கிய அஸ்வினி அய்யர் இயக்கி வருகிறார்.

More News

தனுஷின் 'அம்மா கணக்கு' ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்து வரும் 'அம்மா கணக்கு' என்ற படத்தின் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றதை ஏற்கனவே அறிவித்தோம்....

ரஜினி பட தலைப்பை தேர்வு செய்தது ஏன்? உதயநிதி பட இயக்குனர் விளக்கம்

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கெத்து' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் ரிலீஸாகியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்திற்கு ரஜினியின் பட தலைப்பான 'மனிதன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்....

அரசியல் கட்சியின் தெருமுனை கூட்டத்தில் பேசிய நடிகர் தனுஷ்

தனுஷ் முதன்முதலாக அண்ணன் - தம்பி என இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் 'கொடி' என்ற படத்தில் நடித்து வருகிறார்....

விஜய்சேதுபதி படத்திற்கு விஜய் எதிர்ப்பு

'சூது கவ்வும்' இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபஸ்டியன் மற்றும் சமுத்திரகனி உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் 'காதலும் கடந்துபோகும்'...

நயன்தாரா மீது நம்பிக்கை வைத்திருக்கும் பாண்டியராஜ்

''பசங்க 2'', ''கதகளி'' ஆகிய இரண்டு ஹிட் படங்களை அடுத்து இயக்குனர் பாண்டியராஜ் அடுத்ததாக சிம்பு, நயன்தாரா நடித்த ''இது நம்ம ஆளு'' படத்தை முடித்து வெளியிடுவதில் மும்முரம் காட்டி வருகிறார்....