close
Choose your channels

தனுஷின் 'அம்மா கணக்கு' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Wednesday, January 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்து வரும் 'அம்மா கணக்கு' என்ற படத்தின் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றதை ஏற்கனவே அறிவித்தோம்.


இந்த படம் பாலிவுட்டில் ரிலீஸ் ஆன Nil Battey Sannata' என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பதும் அம்மா மற்றும் மகள் உறவை வெளிப்படுத்தும் உணர்வு பூர்வமான படம் என்பதும் நாம் அறிந்ததே.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

அம்மாவாக ரேவதியும், மகளாக அமலாபாலும் நடிக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை இந்தியில் Nil Battey Sannata' படத்தை இயக்கிய அஸ்வினி அய்யர் இயக்கி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.