தனுஷ்-சினேகா படத்தின் புதிய அப்டேட்!

  • IndiaGlitz, [Sunday,March 03 2019]

செல்வராகவன் இயக்கிய 'புதுப்பேட்டை' படத்தில் இணைந்து நடித்த தனுஷ்-சினேகா ஜோடி மீண்டும் 13 வருடங்கள் கழித்து துரைசெந்தில்குமார் இயக்கும் படம் ஒன்றில் இணைந்து நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் புதிய தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் தனுஷ், அப்பா-மகன் என இரு வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும், அப்பா தனுஷூக்கு ஜோடியாகத்தான் சினேகா நடிக்கவுள்ளதாகவும், மகன் தனுஷூக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

துரைசெந்தில்குமார் இயக்கிய முந்தைய படமான 'கொடி' படத்திலும் தனுஷ், அண்ணன் - தம்பி என இரு வேடங்களில் நடித்திருந்தார் என்பதால் இந்த படம் 'கொடி 2' படமா? அல்லது புதிய கதையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் தனுஷ் நடித்துள்ள 'அசுரன்' மற்றும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்கள் மிக விரைவில் வெளியாகவுள்ளது.

More News

மீண்டும் ஒரு க்ரைம் கதையில் அருண்விஜய்

அருண்விஜய் நடித்த 'தடம்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பேராதரவை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகின்றது.

'கத்தி' படத்துடன் கனெக்சன் ஆகும் 'தளபதி 63'

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சூர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த 'ஆஸ்கார் வின்னர்'

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஆஸ்கார் விருதுகளில் இந்தியாவுக்கு கிடைத்த ஒரே விருது 'பீரியட்' என்ற குறும்படத்திற்கு கிடைத்த விருதுதான்.

1 லட்சம் கொடுத்தால் 10 லட்சம் கள்ளநோட்டு: சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் தலைமறைவு!

ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் ரூ.10 லட்சம் கள்ள நோட்டு தரும் குற்றத்தை செய்து வந்த சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நம்மை அடிக்க ஆள் அனுப்பிய இம்ரான்கான் நல்லவரா?

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புல்வாமா தாக்குதல் அதனையடுத்து இந்திய விமானப்படையின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆகியவைகளை அடுத்து இந்தியாவில் நுழைந்து பாகிஸ்தான் விமானங்கள் தாக்க முயற்சித்தன.