மகனின் முயற்சியால் மீண்டும் இணைந்த தனுஷ்-ஐஸ்வர்யா: வைரல் புகைப்படம்

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினி தம்பதிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரிந்த நிலையில் தற்போது இந்த தம்பதியின் மகன் முயற்சியால் மீண்டும் இணைந்துள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

தனுஷ், ஐஸ்வர்யா தம்பதியின் மூத்த மகன் யாத்ரா படிக்கும் பள்ளிக்கு இன்று ஐஸ்வர்யா சென்றுள்ளார். அங்கு தனது மகன் விளையாட்டு அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதை அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். காவி கொடியை கொண்ட அணி ஒன்றுக்கு தனது மகன் தான் கேப்டன் என்பதையும் ஐஸ்வர்யா பெருமையுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை திங்கள் காலையில் பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று ஐஸ்வர்யா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்

மேலும் இந்த விழாவில் நடிகர் தனுஷும் பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ், ஐஸ்வர்யா மற்றும் அவர்களது இரண்டு மகன்களுடன் இணைந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் பாடகர் ஜேசுதாஸின் மகன் விஜய் ஜேசுதாஸ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தனுஷ் மகன் யாத்ரா விளையாட்டு அணிக்கு கேப்டன் ஆகியுள்ளதை அடுத்து இந்த விழாவில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் இணைந்து பங்கேற்றுள்ளதை அடுத்து, இதேபோல் இருவரும் நிரந்தரமாக இணைய வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

More News

அமெரிக்காவில் கமல் சந்தித்த பிரபலம் யார் தெரியுமா? முழு வீச்சில் 'இந்தியன் 2' பணிகள்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும்  'இந்தியன் 2'  படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளதாக

ரஜினி மகளின் கோலாட்டம்: கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்ட புகைப்படங்கள்!

சமீபத்தில் நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது என்பதும் குறிப்பாக திரையுலக பிரபலங்கள் தங்கள் வீடுகளில் கிருஷ்ணஜெயந்தி கொண்டாடியதன் புகைப்படங்களை

சென்னையில் ஷாருக்கானின் 'ஜவான்' படப்பிடிப்பு: ஷாருக்கானுடன் இணையும் பிரபல நடிகை!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வரும் 'ஜவான்' படத்தை அட்லீ இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதையும்

'சூர்யா 42' திரைப்படம் எத்தனை மொழிகளில் உருவாகிறது தெரியுமா? ஆச்சரியமான தகவல்!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் 'சூர்யா 42' படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

அமைச்சர் அமித்ஷாவை திடீரென சந்தித்த 'ஆர்.ஆர்.ஆர்.' ஹீரோ: பாஜகவில் இணைகிறாரா?

உள் துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' என்ற படத்தின் ஹீரோ திடீரென சந்தித்தது தெலுங்கு மாநிலங்களின் அ