தனுஷ்-எச் வினோத் படத்தின் மாஸ் அப்டேட்.. தெறிக்க போகும் கோலிவுட்!

  • IndiaGlitz, [Thursday,December 15 2022]

அஜித் நடித்துள்ள துணிவு படத்தை இயக்கி முடித்துள்ள எச் வினோத் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று வெளிவந்திருப்பது தனுஷ் ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் அதிரடி ஆக்ஷன் படம் என்றும் இந்த படம் கோலிவுட் திரையுலகில் தெறிக்க வைக்கும் அளவுக்கு படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்நிறுவனம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தளபதி விஜய்யின் 67 வது படத்தை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் தற்போது ’கேப்டன் மில்லர்’ மற்றும் சேகர் கம்முலாவின் தமிழ் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த 2 படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகு அவர் எச் வினோத் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'வாரிசு' - 'துணிவு': இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான உடன்பாடு!

விஜய் நடித்த 'வாரிசு' மற்றும் அஜித் நடித்த 'துணிவு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீசாக இருப்பதால் இரண்டு திரைப்படங்களுக்கும் திரையரங்குகள் புக் செய்வதில் போட்டி ஏற்பட்டது

'அவங்களுக்குத்தான் ரொம்ப சந்தோஷம்.. உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த இளையராஜா!

என்னைவிட அவங்களுக்கு தான் நீங்கள் அமைச்சர் ஆனது ரொம்ப சந்தோசமாக இருக்கும் என உதய நிதி அமைச்சர் ஆனதற்கு இசைஞானி இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'வாரிசு' படத்தை புரமோஷன் செய்கிறாரா பிரபல அரசியல்வாதி?

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்.. மஞ்சிமா மோகன் பகிர்ந்த புகைப்படம்!

 தமிழ் திரையுலக நட்சத்திரங்களான கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகிய இருவரும் கடந்த மாதம் 28ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட நிலையில் திருமணத்திற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்

திருப்பதி கோவில், கடப்பா தர்கா.. ஆன்மீக சுற்றுப்பயணம் செய்யும் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் கடப்பா ஆகிய பகுதிகளுக்கு ஆன்மீகச் சுற்றுலா சென்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.