close
Choose your channels

தனுஷ்-எச் வினோத் படத்தின் மாஸ் அப்டேட்.. தெறிக்க போகும் கோலிவுட்!

Thursday, December 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்துள்ள துணிவு படத்தை இயக்கி முடித்துள்ள எச் வினோத் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று வெளிவந்திருப்பது தனுஷ் ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் அதிரடி ஆக்ஷன் படம் என்றும் இந்த படம் கோலிவுட் திரையுலகில் தெறிக்க வைக்கும் அளவுக்கு படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்நிறுவனம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தளபதி விஜய்யின் 67 வது படத்தை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் தற்போது ’கேப்டன் மில்லர்’ மற்றும் சேகர் கம்முலாவின் தமிழ் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த 2 படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகு அவர் எச் வினோத் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment