மீண்டும் இணையும் தனுஷ்-மாரி செல்வராஜ்: வேற லெவல் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,April 10 2023]

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’கர்ணன்’ என்ற திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இருவரும் மீண்டும் இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இணைந்து உருவாக்கிய வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளது என்பது தெரிந்ததே. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த நிறுவனம் புதிய திரைப்படங்களை தயாரிக்காத நிலையில் தற்போது இந்நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

வொண்டர்பார் நிறுவனத்தின் அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருப்பதாக தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த படத்தை வொண்டர்பார் நிறுவனம் ஜி ஸ்டுடியோ சவுத் என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இயக்குனர் மாரி செல்வராஜ் ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் நடித்த ’மாமன்னன்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் தற்போது அவர் ஒடிடிக்காக ‘வாழை’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் கபடி கதையம்சம் கொண்ட திரைப்படத்தை அடுத்து இயக்க இருக்கிறார் என்று கூறப்படும் நிலையில் தற்போது திடீரென வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

திருமண கோலத்தில் திடீரென தோன்றிய பிக்பாஸ் கேப்ரில்லா.. வேற லெவல் டுவிஸ்ட் என அறிவிப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரும் டிவி சீரியல் நடிகையுமான கேப்ரில்லா திடீரென திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வேற லெவல் டுவிஸ்ட் என்றும் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில்

ரசிகர்களுக்கு விஜய் பிறப்பித்த அதிரடி உத்தரவு.. இனி எல்லாம் வேற லெவல் தான்..!

நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை கட்டுக்கோப்பாக நடத்தி வரும் நிலையில் தற்போது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அதிரடியாக பிறப்பித்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரம்யா பாண்டியனின் 'இடுப்பு' போட்டோஷூட்டில் 2ஆம் பாகம்.. செம கிளாமர் புகைப்படங்கள்..!

நடிகை ரம்யா பாண்டியனின் இடுப்பு போட்டோஷூட் புகைப்படம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பித்த நிலையில் தற்போது அதன் தொடர்ச்சியாக மேலும் சில

கேமிராமேன் கொடுத்து வச்சவன்யா.. தர்ஷா குப்தா லேட்டஸ்ட் போட்டோஷூட்டுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களின் நடித்த நடிகை தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு

லெஜண்ட் சரவணனுடன் நடிக்கும் குக் மற்றும் கோமாளி.. வைரல் புகைப்படம்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக் மற்றும் கோமாளி ஆகிய இருவரும்  லெஜண்ட்   சரவணா உடன் நடித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது