close
Choose your channels

தமிழ், தெலுங்கில் தயாராகும் தனுஷின் 'D51': படப்பிடிப்பு எப்போது?

Sunday, January 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படம் பொங்கல் விருந்தாக நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அவர் தற்போது தனது 50வது படத்தை நடித்து இயக்கி முடித்து உள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் மூன்றாவது படமான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனுஷ் நடிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் தனுஷின் 51 வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது.

தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நாகார்ஜூனா நடிக்க இருப்பதாகவும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் ஸ்ரீ அமிகோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரிக்கிறது என்றும் கூறப்பட்டது. தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 24ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் மும்பை மற்றும் கொச்சியில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இது ஒரு அரசியல் த்ரில் கதையம்சம் கொண்டது என்றும், 40 வருடங்களுக்கு முன்பு அரசியல்வாதிகள் மற்றும் மாபியா கூட்டம் நிகழ்த்திய சில சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.