'வடசென்னை' படத்தின் இசையமைப்பாளர் தனுஷ்?

  • IndiaGlitz, [Friday,August 31 2018]

கோலிவுட் திரையுலகில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர், என பல பரிமாணங்களை கொண்டுள்ள தனுஷ் தற்போது இசையமைப்பாளராகவும் மாறியுள்ள தகவல் வெளிவந்துள்ளது.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் 'வடசென்னை' படத்தின் பாடல்கள் குறித்து இந்த படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிடும்போது, ' வடசென்னை திரைப்படத்தின் அப்டேட்களை தெரிவிக்குமாறு பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு பாடலை நகைச்சுவையாக வித்தியாசமாக உருவாக்கி வருகிறோம். இந்த பாடலின் இசையமைப்பாளர் தனுஷூம் பிரத்யேகமாக ஒன்றை செய்திருக்கிறார். இதுகுறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று அவர் கூறியுள்ளார். இதன்மூலம் தனுஷ் முதல்முறையாக ஒரு பாடலை கம்போஸ் செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.


தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், உள்பட பலர் நடித்துள்ள 'வடசென்னை' படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவும், ஜிபி வெங்கடேஷ் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

கமல், ரஜினி, விஷால் இல்லை: அடுத்த முதல்வர் விஜய்தான்

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் காலமானதை அடுத்து தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வெற்றிடத்தை நிரப்ப ஏற்கனவே கமல், ரஜினி மற்றும் விஷால் அரசியல் களத்தில் இறங்கிவிட்டனர்.

கேரள முதல்வரிடம் நிவாரண நிதியளித்த 80களின் நாயகிகள்

கோலிவுட் திரையுலகில் கடந்த 80களில் கொடிகட்டி பறந்த நடிகர், நடிகைகள் ஒவ்வொரு வருடமும் கூடி தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக உள்ளனர்

18 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழில் நஸ்ருதின் ஷா

கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'ஹே ராம்' திரைப்படத்தில் மகாத்மா காந்தி வேடத்தில் மிக அபாரமாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் நஸ்ருதின்ஷா என்பது தெரிந்ததே

கமல்ஹாசன் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டார்: அமைச்சர் ஜெயகுமார்

நடிகர் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடுவோம் என்று சொன்னால்தான் அது விஷயம். போட்டியிடவில்லை என்று சொன்னால் விஷயமே இல்லை.

இந்திய சூப்பர் ஸ்டார் படத்திற்கு வாழ்த்து கூறிய நம்மூர் சூப்பர் ஸ்டார்

இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முதல்முறையாக ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் இந்த படத்திற்கு 'உயர்ந்த மனிதன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம்