close
Choose your channels

'வடசென்னை' படத்தின் இசையமைப்பாளர் தனுஷ்?

Friday, August 31, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர், என பல பரிமாணங்களை கொண்டுள்ள தனுஷ் தற்போது இசையமைப்பாளராகவும் மாறியுள்ள தகவல் வெளிவந்துள்ளது.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் 'வடசென்னை' படத்தின் பாடல்கள் குறித்து இந்த படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிடும்போது, ' "வடசென்னை திரைப்படத்தின் அப்டேட்களை தெரிவிக்குமாறு பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு பாடலை நகைச்சுவையாக வித்தியாசமாக உருவாக்கி வருகிறோம். இந்த பாடலின் இசையமைப்பாளர் தனுஷூம் பிரத்யேகமாக ஒன்றை செய்திருக்கிறார். இதுகுறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று அவர் கூறியுள்ளார். இதன்மூலம் தனுஷ் முதல்முறையாக ஒரு பாடலை கம்போஸ் செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.


தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், உள்பட பலர் நடித்துள்ள 'வடசென்னை' படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவும், ஜிபி வெங்கடேஷ் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.