ஜூலை 28ல் தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் விருந்தா?
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
இன்று சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் அவர் நடித்த ’கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி தனுஷ் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு அன்றைய தினம் டபுள் விருந்து கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
தனுஷ் தற்போது ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.
அதேபோல் அவர் அடுத்ததாக இயக்கி நடிக்கும் ’D50’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தனுஷ், எஸ்ஜே சூர்யா, சந்திப் கிஷான் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படம் வடசென்னை பின்னணியாக கொண்டது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28ஆம் தேதி ’கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் மற்றும் ’D50’ படத்தின் டைட்டில் போஸ்டர் ஆகிய இரண்டும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் விருந்து கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments