'அசுரன்' படம் குறித்து தனுஷின் முக்கிய அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,April 29 2019]

தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. இந்த நிலையில் தனுஷ் சமீபத்தில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'தனுஷ் 34' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக நடிகை சினேகா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் 'அசுரன்' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாகவும் இது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு என்றும் தனுஷ் அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள போஸ்டரில் 'அசுர வேட்டை' விரைவில் என அறிவித்துள்ளதால் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் முடிந்துவிடுவது மட்டுமின்றி டீசர் உள்ளிட்ட புரமோஷன் தேதிகளையும் விரைவில் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.