'கர்ணன்' படத்தை அடுத்து தனுஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,February 19 2021]

தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 6-ஆம் தேதி ரிலீஸாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தனுஷின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படமான AtrangiRe படத்தில் அக்சயகுமார், சாரா அலிகான் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் என்பதும் இந்த படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததை அடுத்து விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் AtrangiRe திரைப்படம் தற்போது ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனுஷ் நடித்துள்ள இன்னொரு திரைப்படமான ’ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தனுஷின் மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,

More News

இளம் வீரர்களுக்கு கைக்கொடுத்த சிஎஸ்கே!

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் போட்டியில் சென்னை சிஎஸ்கே அணி தகுதிச் சுற்றுக்கே போகாமல் வெளியேறியது.

உலகில் தனித்து விடப்பட்டவராக உணர்ந்தேன்… விராட் கோலி தெரிவித்த கருத்தால் அதிர்ச்சி!

இங்கிலாந்துடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணி தற்போது அகமதாபாத்தில் முகாமிட்டு உள்ளது.

விவசாயியின் இறந்த உடலை… எலி கடித்து குதறிய கொடூரம்!

மாரடைப்பால் உயிரிழந்து மாச்சுவரியில் வைக்கப்பட்ட விவசாயி ஒருவரின் உடலை எலிகள் கடித்து குதறிய சம்பவம் ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்று இருக்கிறது.

என் படம் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கடும்: ஷகிலா

கடந்த 80களில் ஆபாச படங்களில் நடித்து வந்த ஷகிலா லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்று இருந்தார் என்பதும் முன்னணி நடிகர்கள் படங்கள் கூட ஷகிலாவின் படங்களால் வசூல் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

என் இறுதிச்சடங்கிற்கு வாருங்கள்: தற்கொலை செய்த பிரபல நடிகரின் ரசிகர் எழுதிய கடிதம்!

பிரபல நடிகர் ஒருவரின் ரசிகர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தன்னுடைய இறுதி சடங்கிற்கு அந்த நடிகர் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது