close
Choose your channels

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் ரிலீஸ் தேதி.. ரஜினி, சிவகார்த்திகேயன் படத்துடன் மோதலா?

Wednesday, November 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘கேப்டன் மில்லர்’ படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொங்கல் தினத்தில் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’, சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை 4’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது தனுஷின் ’கேப்டன் மில்லர்’ படமும் பொங்கல் ரிலீஸ் என்பதால், பொங்கல் நாளில் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து கிடைக்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது

தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சிவராஜ்குமார் நடித்துள்ளார் என்பதும் சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பலர் இந்த படத்தின் நடிப்பு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.